ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காடு தீம்! புலி.. மான்! இதுதான் பிக்பாஸ் வீடா? வைரலாகும் புகைப்படங்கள்!

காடு தீம்! புலி.. மான்! இதுதான் பிக்பாஸ் வீடா? வைரலாகும் புகைப்படங்கள்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg boss tamil 6 : பிக்பாஸ் வீடு இந்தமுறை எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. 6வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது.

  பிரம்மாண்ட செட்டுடன் புதுப்புது ரூல்ஸுடன் பிக்பாஸ் 6 தயாராகி வருகிறது. இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சின்னத்திரை நடிகைகளான, ஆயிஷா, விஜே மகேஸ்வரி, விசித்ரா, ஸ்ரீநிதி, விஜய் டிவி மைனா, ஸ்ரீநிதி, ஜிபி முத்து, நடிகை ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அமுதவாணன் உள்ளிட்ட பல பெயர்கள் பங்கேற்பாளர்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  பங்கேற்பாளர்கள் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க பிக்பாஸ் வீடு இந்தமுறை எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் சில பலராலும் ஷேர் செய்யப்படுகிறது. அந்தப்புகைப்படங்களில் காடு தீமில் புலி, சிங்கம், மான் போன்ற புகைப்படங்கள் அடங்கியுள்ளன.

  இதையும் படிங்க: 'அப்பாவின் அன்பு! விலைமதிப்பற்ற போட்டோ!' ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் பகிர்ந்த ஐஸ்வர்யா!

  கமல்ஹாசன் வெளியிட்ட பிக்பாஸ் ப்ரோமோவிலும் காடு, மான், புலி, சிங்கம் என்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தி இருப்பார். அதனால் சோஷியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் பிக்பாஸ் செட்தான் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் மராத்தியில் வெளியாகும் பிக்பாஸ் செட்டும் இதேபோல் இருப்பதால் இந்து அங்குள்ள புகைப்படமாக இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

  இதற்கிடையே பிக்பாஸ் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புதுப்புது ப்ரோமோக்களையும் விஜய் தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்டு ஆர்வத்தை தூண்டி வருகிறது. நேற்று வெளியான ஒரு ப்ரோமோ அதிக கவனம் ஈர்த்தது. அந்த ப்ரோமோவில், இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் திருப்பம்… 100 நாளும் இருக்கும் என்று கூறும் கமல் பிக் பாஸ் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Bigg Boss Tamil, Kamal Haasan