ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிய கமல் ஹாசன் - பின்னணி இது தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிய கமல் ஹாசன் - பின்னணி இது தான்!

பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கமல்ஹாசனால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து தெரிந்துக் கொள்வோம்.

பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தமிழின் புதுமை என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். ஆங்கிலத்தில் வெற்றி பெற்று, இந்தியில் பல்வேறு சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சியில் endomal நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 15 பிரபலங்களை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து 100 நாட்கள் தொலைபேசி, புத்தகம் போன்ற பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லாமல் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களையும் சண்டைகளையும் அப்படியே ரசிகர்களுக்கு காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டை ஏற்படுவது போல அடிக்கடி போட்டிகளை கொடுத்து அதன் மூலம் ஏற்படும் சண்டைகளுக்கு, வார இறுதியில் ஒரு பிரபலத்தை வைத்து பஞ்சாயத்து செய்வது இந்த நிகழ்ச்சியின் முறை. 2017ம் ஆண்டு தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுத்து யார் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அன்றைய தேதியில் நிலவிய நிலையில், சூர்யா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ஆரம்பகட்ட தகவல்கள் வெளியானது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என பின்னர் இறுதி செய்யப்பட்டு, இதற்காக பெரும் தொகை கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நேரம் வழங்கிய நிலையில் இரண்டு நாட்களுக்கான எபிசோடுகளை ஒரே நாளில் எடுத்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான சம்பளத்தை 15 நாட்கள் மட்டுமே பணி செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வழங்குவதால் கமலஹாசனும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றார். 2017-ஆம் ஆண்டு முதல் சீசன் நிகழ்ச்சியின்போது

கமல்ஹாசனின் பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதைய அரசியல் சூழலை மேடையில் கமலஹாசன் விளாசிய விதம் பல ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் கமலஹாசன் தோன்றும் நிகழ்ச்சியின் TRP எனப்படும் எத்தனை நேயர்கள் நிகழ்ச்சியை பார்த்தார்கள் என்ற வியாபார முடிவுகள் உச்சத்தைத் தொட்டது.

கமல்ஹாசன் அரசியலில் நுழையும் திட்டத்துடன் இருந்த அந்த காலகட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் கமலஹாசன் பேசிய பேச்சிற்கு கிடைத்த வரவேற்பு, அவர் அரசியலுக்குள் தைரியமாக கால்வைக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் கமலஹாசனின் பேச்சு வரவேற்பை பெற்றதை அடுத்து துணிச்சலுடன் அரசியல் களத்தில் குதித்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கியுள்ள கமலஹாசன், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தனது திரைப் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். தனது திரைப்படம் தொடர்பான அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியில் வெளியிடுவதன் மூலம், பல கோடி ரசிகர்களுக்கு தனது படத்தின் அறிவிப்பு சென்றடையும் என கமலஹாசன் நினைப்பதன் காரணமாக, அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலஹாசன் நிறுவனத்துடன் சோனி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு கூட இந்த மேடையில் தான் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் புதுமையை நிகழ்த்திக் காட்டிய கமலஹாசன், அதன் தொடர்ச்சியாக வலைதளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிவு செய்தார். நிகழ்ச்சியில் புகழ் அடைந்த நட்சத்திரங்களை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வலைதளத்தில் மட்டும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிக்பாஸ் நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில் ஒரு சில வாரம் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புகளில் பங்கேற்ற கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் பணிகள், இந்த நிகழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுவதாக உணர்ந்துள்ளார்.

ஏப்ரல் 29ம் தேதி விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காண நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கமல்ஹாசனால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் 100 நாட்களுக்கான நிகழ்ச்சியை முழுவதும் கமலஹாசன் பார்க்கும் சூழல் இருந்து வந்தது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சேர்த்து தொகுத்து வழங்குவதால் அல்டிமேட் நிகழ்ச்சியையும் இடைவிடாது பார்க்கவேண்டிய கட்டாயம் கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அயர்ச்சியான ஒரு சூழலுக்கும் கமலஹாசன் தள்ளப்பட்டுள்ளார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இதிலிருந்து மீளும் வண்ணம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமல்ஹாசன் கொரோனோ நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினர் மருத்துவமனையிலிருந்து ரம்யா கிருஷ்ணனை, கமலஹாசன் வீடியோ மூலம் அறிமுகப்படுத்தி வைத்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இனி வரும் வாரங்களில் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்... உடனிருக்கும் இளம்பெண் யார்?

எனினும் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனை மீண்டும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் எண்டோமால் நிறுவனம் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் செய்த ஐந்து ஆண்டுகளுக்கான உடன்படிக்கை இந்த ஆண்டுடன் நிறைவடைவதையடுத்து, இதனை மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஒப்பந்தத்தை நீட்டிக்குமா? அல்லது அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா என்ற கேள்வியும் நிலவி வருகிறது.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

இதன் காரணமாக எதிர்வரும் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என்றும் தெரியவந்துள்ளது. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாசகம் அந்த நிகழ்ச்சிக்கும் பொருந்தும் என்பதால் அடுத்த ஆண்டு வரை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Bigg Boss Tamil, Kamal Haasan