ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குட் பை சொல்லும் கமல் ஹாசன்?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குட் பை சொல்லும் கமல் ஹாசன்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருப்பதால், அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் கமலுக்கு இல்லாமல் இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெளிநாட்டில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் இந்தியாவுக்கு இந்தியில் அறிமுகமானது. அங்கு இந்நிகழ்ச்சி 16 சீசன்களை கடந்துள்ளது. இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. இதனை நடிகர்வ் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒப்பந்தமானார். இதுவே தமிழ் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்க முக்கியக் காரணமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, தற்போது 5 சீசன்களைக் கடந்து, 6-வது சீசனில் உள்ளது.

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போல, தெலுங்கில் நாகர்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் குறைவதையடுத்து, அதிலிருந்து நாகர்ஜுனா விலக முடிவெடுத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

அதேபோல் தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் குறைந்து வருவதால் இந்த சீசனோடு பிக் பாஸ் நிகழ்ச்சியினுடனான உறவை முறித்துக் கொள்ள கமல் ஹாசன் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் போதே, அதிலிருந்து தான் விலக வேண்டும் என்பது அவரது எண்ணமாம்.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

தவிர, அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருப்பதால், அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் கமலுக்கு இல்லாமல் இல்லை. அதோடு விக்ரம் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, KH234 என படங்களிலும் அவர் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan