• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்... கேள்விக்கான விடை இதோ

அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்... கேள்விக்கான விடை இதோ

பிக் பாஸ் கமல் ஹாசன்

பிக் பாஸ் கமல் ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

  • Share this:
    இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை மருத்துவமனையிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த வருடம் பிக் பாஸ் தெலுங்கை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா, படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற போது, அவரது மருமகளாக இருந்த சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதே போல் தற்போது கமலுக்கு பதில் அவரது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவல்கள் வலம் வருகின்றன.

    அதே நேரத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் அல்லது ஏற்கனவே விஜய் டிவி-யில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சூர்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.



    ஆனால் கமல் ஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் மருத்துவமனையில் இருந்தவாறு அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் நாளை வெளியாகும் முதல் ப்ரோமோவில் இதற்கான விடை தெரிந்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: