முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதுவீடு கட்டி பால் காய்ச்சிய அறந்தாங்கி நிஷா… வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் வாழ்த்து!

புதுவீடு கட்டி பால் காய்ச்சிய அறந்தாங்கி நிஷா… வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் வாழ்த்து!

புதுமனை புகுவிழாவில் அறந்தாங்கி நிஷா மற்றும் குடும்பத்தினர்.

புதுமனை புகுவிழாவில் அறந்தாங்கி நிஷா மற்றும் குடும்பத்தினர்.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சினிமாவில் நடித்து வரும் நிஷா, மேடைகளில் பேசி வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரையில் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, புது வீடு கட்டி பால் காய்ச்சியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று நேற்று வெளியாகி 10 லட்சம் பார்வையை நெருங்கி வருகிறது. வீடியோவை பார்த்த அறந்தாங்கி நிஷாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவைப் போன்று சின்னத்திரையிலும் பெண் காமெடியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. திறமை மிக்க ஆண்களுக்கு மத்தியில் அறந்தாங்கி நிஷா தனது தனித்துவமான நகைச்சுவை பேச்சாற்றலால், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சினிமாவில் நடித்து வரும் நிஷா, மேடைகளில் பேசி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4-இல் பங்கேற்று ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டார். ஒரு தரப்பினர் இவை கடுமையாக விமர்சித்திருந்தனர். தற்போது கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நிஷா கலக்கி வருகிறார்.

' isDesktop="true" id="899645" youtubeid="S42HNIbRv8I" category="television">

சில வாரங்களுக்கு முன்பாக தனது வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அவரது யூடியூப் சேனலில் வெளியான இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையை கடந்திருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு புதுமனை புகுவிழாவை அறந்தாங்கி  நிஷா சமீபத்தில் நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி 1 மில்லியன் பார்வையை நெருங்கி வருகிறது. இவரது யூடியூப் சேனலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aranthangi Nisha