• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடி தளம் தொடங்கும் பிரபல தொலைக்காட்சி?

ஓடிடி தளம் தொடங்கும் பிரபல தொலைக்காட்சி?

ஓடிடி

ஓடிடி

கலைஞர் தொலைக்காட்சி வசம் உள்ள படங்களை அதில் வெளியிடலாம் என்பது ஒரு காரணம்.

  • Share this:
    சன் தொலைக்காட்சி சொந்தமாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் வைத்திருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும் சொந்த ஓடிடி தளம் தொடங்குகிறது.

    ஒரு தொழில் மட்டும் செய்வதால் உண்டாகும் ரிஸ்க்கைவிட, பல தொழில்கள் செய்யும் போது ரிஸ்க் குறைவு. அதுவும் சினிமாவில் பல தொழில்களில் இருப்பவர்களால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிகிறது.

    உதாரணமாக ரஜினி அல்லது விஜய் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்க முப்பது கோடிகளுக்கு மேல் தர வேண்டியிருக்கும். அதே நடிகர்களை வைத்து படத்தை தயாரித்தால், அந்த முப்பது கோடி லாபம். தவிர, படத்தை டப் செய்து தங்களின் பிறமொழி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யலாம்.

    படத்தின் பாடல், காமெடிக் காட்சிகளை பிரத்யேகமாக தங்கள் தொலைக்காட்சிகளில் மட்டும் பயன்படுத்தலாம். சன், ஸீ போன்ற தொலைக்காட்சிகள் ஓடிடி தளங்கள் வைத்துள்ளன. அதில் இந்தப் படங்களை வெளியிடலாம். படத்தை தயாரிப்பது என்ற ஒரே கல்லில் இப்படி பல மாங்காய்கள் அடிக்கலாம்.

    கலைஞர் தொலைக்காட்சி இதுவரை படங்கள் தயாரித்ததில்லை. எனினும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இதுவரை கலைஞர் தொலைக்காட்சிக்கே சென்றுள்ளது. சமீபத்தில் ரெட்ஜெயண்ட் அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது கலைஞர் தொலைக்காட்சி. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களின் ஒளிபரப்பு உரிமைகளை கலைஞர் தொலைக்காட்சி வாங்குகிறது.

    விரைவில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் ஓடிடி தளம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சி வசம் உள்ள படங்களை அதில் வெளியிடலாம் என்பது ஒரு காரணம். தவிர புதிதாக ஓடிடி தளத்துக்கென்றே தொடர்கள், திரைப்படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இனிவரும் காலம் ஓடிடிக்கு சாதகமானது என்பதால் பலரையும் போல கலைஞர் தொலைக்காட்சியும் ஓடிடி தளம் தொடங்கும் முனைப்பில் உள்ளது.

    விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: