Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் காஜல் பசுபதி.. மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி!

கலர்ஸ் தமிழில் காஜல் பசுபதி.. மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி!

காஜல் பசுபதி

காஜல் பசுபதி

மறுபடியும் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் காஜல் பசுபதி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல் மூலம் விஜே காஜல் பசுபதி மீண்டும் சின்னத்திரையில்  ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

    சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி விஜேவாக இருந்து நடிகையாக மாறியவர். . சன் மியூசிக் சேனலில் விஜே-வாக மீடியா வாழ்க்கையை துவக்கிய நடிகை காஜல்  வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும், 2017-ல் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதன் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.

    சீரியல் ஆடிஷனுக்கு போய் திருப்பி அனுப்பப்பட்ட பிக் பாஸ் ராஜூ!

    வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் நடித்தார். சன் டிவி சீரியல், விஜய் டிவி சீரியல் என பிஸியாக நடித்தவர் நடுவில் சின்ன  கேப் எடுத்தார். உடல் எடையை குறைத்து மறுபடியும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக மாறினார். சமீபத்தில் ஷகிலா எடுத்த யூடியூப் பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து காஜல் பேசி இருந்தார். இந்நிலையில் மறுபடியும் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் எஸ்.ஐ காவேரி ரோலில் காஜல் தற்போது என்ட்ரி கொடுத்து இருக்கிறார். ராஜ மாணிக்கம் கொலை வழக்கை காவேரி கையில் எடுத்துள்ளார். இதுக் குறித்து புவனா மீது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. விடாமல் அவரை விசாரணை என்ற பெயரில் மடக்குகிறார். ராஜ மாணிக்கம் கொலையில் இருக்கும் மர்மத்தை இவர் தான் கண்டுப்பிடிக்க போகிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் காஜல் பசுபதியின் என்ட்ரி சீரியலை விறுவிறுபாக்க கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி