• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் நடிக்கிறார் காஜல் பசுபதி... அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் மூலம் ரீஎன்ட்ரி!

மீண்டும் நடிக்கிறார் காஜல் பசுபதி... அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் மூலம் ரீஎன்ட்ரி!

காஜல் பசுபதி

காஜல் பசுபதி

வில்லி கேரக்டரில் நடித்தவர் மாற்றப்பட்ட நிலையில், காஜல் பசுபதியின் என்ட்ரி சீரியலை விறுவிறுபாக்க கூடும்

  • Share this:
    சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி கண்ணான கண்ணே சீரியலில் விரைவில் புதிதாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உலக தமிழர்களிடையே பிரபல டிவி சேனலாக திகழ்ந்து வரும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. காலை துவங்கி இரவு வரை ஏராளமான சீரியல்கள் சன் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டாலும் மாலை 6.30 மணி முதல் இரவு வரை 10 மணி வரையிலான ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளது கண்ணான கண்ணே சீரியல்.

    இந்த சீரியல் தெலுங்கு மொழியில் ஹிட்டடித்த சீரியலான 'பௌர்ணமி' மற்றும் கன்னட சீரியலான 'மானசரே' உள்ளிட்ட சீரியல்களின் கதை கருவை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கண்ணான கண்ணே சீரியலை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. நடிகை நிமிக்ஷிதா, பிரபல சீரியல் நடிகர் ராகுல் ரவி, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நித்யா தாஸ் ஆகியோர் இந்த சீரியலில் முதன்மை மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள்.

    ஹீரோயினாக மீரா என்ற ரோலில் நடிகை நிமிக்ஷிதா, ஹீரோவாக யுவராஜ் என்ற ரோலில் நடிகர் ராகுல் ரவி, கௌதமாக நடிகர் பப்லு பிரித்திவிராஜ், இவரது மனைவி யமுனா கேரக்டரில் நடிகை நித்யா தாஸ் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பிரபல நடிகை ஒருவர் புதிதாக இணைய இருக்கிறார். தற்போது கோலிவுட்டில் தனது கொரியோகிராஃப் திறமையால் கலக்கி கொண்டிருக்கும் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி கண்ணான கண்ணே சீரியலில் விரைவில் புதிதாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது இன்ஸ்டாவில், நடிகை காஜல் பசுபதியுடன் எடுத்து கொண்ட செல்ஃபி ஃபோட்டோவை ஷேர் செய்து இருக்கிறார்.




    ஏற்கனவே இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்தவர் மாற்றப்பட்ட நிலையில், காஜல் பசுபதியின் என்ட்ரி சீரியலை விறுவிறுபாக்க கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். சன் மியூசிக் சேனலில் விஜே-வாக மீடியா வாழ்க்கையை துவக்கிய நடிகை காஜல் பசுபதி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும், 2017-ல் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதன் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: