Home /News /entertainment /

குழந்தைப் பருவத்திற்கே திரும்பிவிட்டேன் - ராமாயணம் தொடர் பார்த்த மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்!

குழந்தைப் பருவத்திற்கே திரும்பிவிட்டேன் - ராமாயணம் தொடர் பார்த்த மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரை பார்த்து ரசித்த நடிகை காஜல் அகர்வால் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்களில் ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பபடும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

அதன்படி இன்று முதல் ராமாயணம் தொடர் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒருபகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பபடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் தொடரைப் பார்த்த காஜல் அகர்வால், “குழந்தைப் பருவத்துக்கே மீண்டும் என்னை கொண்டு சேர்த்துவிட்டது. நாங்கள் குடும்பத்துடன் ராமாயணம் மற்றும் மகாபாரதம் பார்த்த காட்சி என் கண் முன் தோன்றுகிறது. அப்போது நாங்கள் வாரம்தோறும் ராமாயணம் தொடரை தவறாமல் பார்ப்பால். தற்போது மீண்டும் இந்தத் தொடரை பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்திய இதிகாசத்தை இன்றைய குழந்தைகளும் அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.



ராமாயணம் தொடரைத் தொடர்ந்து மகாபாரதம் இன்று முதல் நண்பகல் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இளையராஜாவின் பாடலில் நோய் எதிர்ப்பு சக்தி - பாகுபலி பட இசையமைப்பாளர் வீடியோ



Published by:Sheik Hanifah
First published:

அடுத்த செய்தி