ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

விஜய் டிவி சீரியல் நடிகை

விஜய் டிவி சீரியல் நடிகை

மலையாள நடிகைகளான கனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் சந்திராவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையான சந்திரா லட்சுமணனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

  விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்திரா.இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பின்னர் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க கவனம் செலுத்தினார். ’கோலங்கள்’ ’மகள்’, ’சொந்தபந்தம்’, ’பாசமலர்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.. விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டுள்ளார்.

  பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவரா?


  இவருக்கு 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. 38 வயதில் சந்திரா திருமணம் செய்துக் கொண்டது இணையவாசிகளால் பரவலாக பேசப்பட்டது. சந்திரா, மலையாள சீரியலான ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் நடிகர் டோஷூடன் இணைந்து நடித்தார். இருவம் காதலிக்க தொடங்கினார். கடைசியில் ரீல் ஜோடிகளான இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினர். திருமணம் ஆகி 1 வருடம் ஆன நிலையில் சந்திரா லட்சுமணன் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். பிரபலங்களும் ரசிகர்களும் இந்த ஜோடியை வாழ்த்தி இருந்தனர்.


  இந்நிலையில் தற்போது சந்திரா - டோஷ் கிறிஸ்டி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கையை பிடித்தப்படியே எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கும் சந்திரா ஆண் குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நன்றி, எனக்காக பிராதித்த ரசிகர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். மலையாள நடிகைகளான கனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் சந்திராவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv