• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 2006ல் காதலர்கள்.. 2021ல் சிறந்த பெற்றோர்கள்.. சிலிர்க்கும் பிரஜின் - சாண்ட்ரா ஜோடி!

2006ல் காதலர்கள்.. 2021ல் சிறந்த பெற்றோர்கள்.. சிலிர்க்கும் பிரஜின் - சாண்ட்ரா ஜோடி!

பிரஜின் - சாண்ட்ரா

பிரஜின் - சாண்ட்ரா

திறமை இருந்தும் வெள்ளித்திரையில் தனக்கென தனி இடம் பிடிக்க முடியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார் பிரஜின்.

 • Share this:
  சின்னத்திரை நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரஜின்

  சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவு பெற்று வெள்ளித்திரைக்கு வர சிலரால் மட்டுமே முடிகிறது. தங்களது பேச்சு திறமையுடன் சேர்த்து நடிப்பு திறமையும் கொண்டவர்கள் சின்னத்திரையில் இருந்து சினி துறைக்குள் நுழைகிறார்கள். அப்படி நுழைந்தவர்களில் ஒருவர் தான் நடிகர் பிரஜின் பத்மநாபன். சின்னத்திரையில் ரசிகர்களின் அட்டகாசமான வரவேற்பை பெற்றிருந்தாலும், வெள்ளித்திரையில் எதிர்பார்த்த அளவு இன்னும் அவர் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை.

  ஆனால் 2019-ல் மலையாளத்தில் இவர் நடித்த லவ் டிராமா ஆக்ஷன் என்ற திரைப்படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.நடிகர் பிரஜின் பத்மநாபன். இவரின் பூர்விகம் கேரளா. இவர் அங்கிருக்கும் கோழிக்கோட்டில் கடந்த 1981 செப்டம்பர் 6-ல் பிறந்தார். தனது கல்லூரி படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்த பிறகு, 2003-ஆம் ஆண்டு சன் மியூசிக் சேனலில் விஜே-வாக வேலை பார்த்தார். தனது அழகான உச்சரிப்பு மற்றும் கவரும் வகையிலான பேச்சு திறமையால் லட்சக்கணக்கான சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார்.குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம் இருந்தனர். ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திருந்ததால் சீரியாலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவி-யில் இது ஒரு காதல் கதை, சன் டிவி-யில் பெண், அஞ்சலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மீண்டும் விஜய் டிவி திரும்பிய பிரஜின், காதலிக்க நேரமில்லை சீரியலில் நடித்து முன்பை விட அதிகம் பிரபலமானார்

  அபிஷேக் 2.0 வாக மாறிய பிரியங்கா... அப்ப இத்தனை நாள் அத்தனையும் நடிப்பா?

  பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து சினிமாவை டார்கெட் செய்து தொழில் வாழ்க்கையை நகர்த்திய பிரஜின் சா பூ த்ரீ, தீ குளிக்கும் பச்சை மரம், சுற்றுலா, மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும், முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது வெளியானதால் பெருமளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது படக்குழுவினர் மற்றும் பிரஜினின் வருத்தம்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா... முதல் ஆளாக வந்த பிக் பாஸ் பிரபலம்!

  இடையே விஜய் டிவி-க்கு திரும்பிய பிரஜின் சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி சீரியல்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை மீண்டும் பெற்றார். திறமை இருந்தும் வெள்ளித்திரையில் தனக்கென தனி இடம் பிடிக்க முடியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார் பிரஜின்.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  Sandra Amy Prajin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sandra_amy_prajin)


  தொழில் வாழ்க்கைக்கு இடையே கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே சின்னத்திரை நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரஜின். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 மார்ச்சில் ட்வின்ஸ் பெண் குழந்தைகள் பிறந்தன. இதனிடையே இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதற்கு முன் 2006-ல் எடுத்து கொண்ட ஃபோட்டோவும், தற்போது ட்வின்ஸுடன் எடுத்து கொண்டிருக்கும் ஃபோட்டோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: