• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரோலுக்கு வந்த சோதனை! மீண்டும் மாற்றமா?

இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரோலுக்கு வந்த சோதனை! மீண்டும் மாற்றமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

கவினுக்கு ஜோடியாக காவியா அறிவுமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா அறிவுமணி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான கதாப்பாத்திரமான ’முல்லை’ கதாப்பாத்திரத்தில் வி.ஜே சித்ரா நடித்து வந்தார். கதிர் - முல்லை ஜோடியின் ரொமான்ஸ், சீரியலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இதனால், சீரியல் வெகு சீக்கிரமே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிட் அடித்தது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக முல்லையாக நடித்த வி.ஜே சித்ரா, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    அவரின் தற்கொலை தமிழ் சினிமா துறையில் மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முல்லை கதாப்பாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என பெரும் குழப்பமே நீடித்தது. ஆனால், யாரையாவது நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற நிலையில், பலரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டது. சித்ரா அளவுக்கு, இம்பாக்ட் கிரியேட் செய்யக்கூடிய ஆளாக இருக்க வேண்டும் என பார்த்துப் பார்த்து நடிகைகள் தேர்வு நடத்தப்பட்டது.

    முடிவில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காவியா அறிவுமணி, முல்லையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்ரா இறந்தவுடன், அந்த கதாப்பாத்திரத்தில் காவியா நடித்தத்தால் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் நடிப்பும் சுமாராக இருப்பதாகவே விமர்சிக்கப்பட்டது. ஆனால், போகப்போக முல்லையாக மாறினார் காவியா. ரசிகர்களிடமும் ஆதரவைப் பெற்றுவிட்டார். ஆனால், விரைவில் இந்த சீரியலில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருப்பதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். அண்மையில் வெளிவந்த லிப்ட் திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாகவும், நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திலும் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

    அந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா அறிவுமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவர் விலகுவது உறுதியாகிவிடும். முல்லை கதாப்பாத்திரத்தில் புதியதாக இன்னொருவர் நடிக்க வேண்டியிருக்கும். எனினும், காவியா அறிவுமணி சீரியலில் இருந்து விலகுவது குறித்து எந்தவிமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.

    உதவி செய்த கண்ணனை மறந்த குடும்பம்... குழந்தை முகத்தை காட்டினால் மட்டும் போதுமாம்?

    இப்போதுதான் முல்லையாகவே மாறி நடித்து வந்த காவியா விலகுவதாக வெளியாகியிருக்கும் தகவல், ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. அந்தக் கதாப்பாத்திரத்தில் இன்னொரு புதுமுகமா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள், என்னப்பா ’முல்லை’க்கு வந்த சோதனை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: