Home /News /entertainment /

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்... வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கிறார்!

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்... வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கிறார்!

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி

முதன் முதலில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் அறிமுகமானார். அறிவு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

    சூப்பர் ஹிட்டாகும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகும். ஒரு சில கதாபாத்திரங்களால் ஹிட்டாகும் சீரியல்களும் உண்டு. அப்படி ஹிட்டாகும் கதாபாத்திரங்களுக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் அமைவது பல ஆண்டுகளாக வழக்கம். நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர் மறந்து, சீரியலின் கதாபாத்திரத்தின் பெயரையே அழைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஒன்றி விடும்.

    உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மறைந்த நடிகை சித்ராவை கூறலாம். சித்ரா பல ஆண்டுகள் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பாத்திரம் அவருக்கு பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்றுத் தந்தது. எதிர்பாராதவிதமாக அவர் மறைந்த பிறகு, அந்த இடத்தில் நடிகை காவ்யா அறிவுமணி புது முல்லையாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் பாருங்க.. ஸ்விட்சர்லாந்துக்கு டூர் சென்ற சமந்தா – வைரல் புகைப்படம்

    இவர் முதன் முதலில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் அறிமுகமானார். அறிவு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின்னர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காவியா, அடிக்கடி வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். ஹோம்லி லுக், மாடர்ன் லுக் என அவர் ஷேர் செய்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பது போன்ற போஸ்டர் ஒன்று வெளியாகியது.

    அது சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்த பொது தான், அவர் ஒரு வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியுள்ளது தெரியவந்தது. டாம் அன்ட் ஜெர்ரி என்ற புதிய வெப் சீரிஸில் தான் இவர் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில், அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகப்போவதாக ஒரு தகவல் வெளியானது. இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்தி வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக தனது முதல் படம் பற்றி காவ்யா அறிவுமணி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண் கார்த்திக் எடுக்கவுள்ள படத்தில் தான் காவ்யா அறிவுமணி நடிக்க இருக்கிறார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

    இப்படத்திற்கு ரிப்புபரி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மகேந்திரன் ஹீரோவாகவும் காவியா அறிவுமணி ஃபீமேல் லீடாகவும் நடிக்கின்றனர். இந்த இயக்குனர் ஏற்கனவே சூப்பர் டூப்பர் என்ற காமெடி த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது என கூறியுள்ள காவிய அறிவுமணி, தான் இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடி இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். எது எப்படியோ சின்னத்திரையில் தினந்தோறும் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்த இவர், விரைவில் வெள்ளித்திரைக்கு வரப்போகிறார் என்பதில் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி