சீரியலில் மட்டுமில்லை இவர் நிஜத்திலும் அப்படி தானாம்... விஜய் டிவி சீரியல் நடிகை பற்றி பரவும் தகவல்!

காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா

20 வயதாகும் இவரின் ஹாட் புகைப்படங்கள் ஏகப்பட்ட விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தது.

 • Share this:
  விஜய் டிவி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரியங்கா குமார் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரியங்கா குமார். தமிழ் சீரியலில் நுழைந்த சில காலங்களிலே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இவரின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்தால் தெரியும் லைக்ஸ் மற்றும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் குவிகிறது. இவரின் சொந்த ஊர் மைசூர். சிறு வயதில் இருந்தே சினிமா மீது கொண்ட ஆசையால் பள்ளியில் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். எண்ணற்ற விளம்பரங்கள், ஷூட்களில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டதால் இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.

  பின்பு மைசூரில் தனது பிபிஏ படிப்பை நிறைவு செய்து முழுநேரம் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இவரின் முதல் சீரியல் பயணம் கன்னட சீரியல் கிருஷ்ணா.அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஒருசில சீரியல்களில் நடித்தார். அப்போது தான் சன் டிவியில் ஒளிப்பரப்பான சாக்லேட் சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
  ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  P R I Y A N K A K U M A R இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankaa_7)


  கொரோனா காரணத்தால் அந்த சீரியல் நிறுத்தப்பட தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் விஜய் டிவி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருக்கும் பிரியங்கா நிஜத்திலும் அப்படியே வெண்ணிலாவின் ஜெராக்ஸ் தான். 20 வயதாகும் இவரின் ஹாட் புகைப்படங்கள் ஏகப்பட்ட விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தது. ஆனால், அதுக்குறித்து துளியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல் ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அசத்தி வருகிறார் பிரியங்கா. அதுமட்டுமில்லை யூடியூப்பில் பிரியங்கா அளித்த பல பேட்டிகளில் போல்டான பதில்களை கூறி கலக்கி இருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: