முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆசிரியர் மீது காதல்.. நீங்க திருந்தவே மாட்டீங்களா? விஜய் டிவி சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆசிரியர் மீது காதல்.. நீங்க திருந்தவே மாட்டீங்களா? விஜய் டிவி சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மனதில் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கல்லூரி கதை அம்சத்துடன் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியல் தற்போது சின்ன பஞ்சாயத்தில் சிக்கி உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் பல்வேறு சேனல்களுடன் போட்டி போட்டுக் கொண்டு 10க்கும் மேற்பட்ட சீரியல்களை ஒளிப்பரப்பி வரும் விஜய் டிவியில், மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.  துடுக்கான தைரியமான பெண்ணாக வென்னிலா கதாபாத்திரத்தில் சாக்லேட் சீரியல் புகழ் பிரியங்கா நடித்து வருகிறார். இவருக்கு தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த சீரியல் நாயகனாக புரஃபசர் ரோலில் சூர்யாவாக நடிகர் சூர்ய‌ தர்ஷன் நடித்து வந்தார்.ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது இதே ரோலில் நடிகர் சுவாமிநாதன் காற்றுக்கென்ன வேலி சிரீயலில் நடித்து வருகிறார். கதைப்படி வென்னிலாவை அடித்தது சூர்யாவின் தங்கை அபி என எல்லா உண்மையும் தெரிந்து தற்போது மீண்டும் வென்னிலாவும் அவருடைய நண்பர்களும் செமஸ்டர் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நேரத்தில் தான் வென்னிலாவுக்கும் சூர்யாவுக்கு காதல் இருப்பது போல சில காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றனர். இந்த சீரியலின் புரமோ வெளியாகியது அதில் வென்னிலா , சூர்யாவை ரசிப்பது போல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு ரசிகர்கள் மனதில் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. காரணம், படிக்கும் வயதில் படிப்பு சொல்லி தரும் குரு மீது காதல் கொள்வது, அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என காட்சிகள் இடம்பெறுவது சீரியல் பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

' isDesktop="true" id="622993" youtubeid="EwaBB6TXepQ" category="television">

இந்த புரமோவுக்கு கீழே ஏகப்பட்ட எதிர்மறை வசனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. ”ஆசிரியர் தெய்வதிற்கு சமம்...இளம் தலைமுறையினர் கெட்டு போக இதுவும் ஒரு காரணம்.இதுப்போன்ற சீரியல்களை அரசு தடை செய்ய வேண்டும்” எனவும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv