ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவெற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு தற்போது இன்னொரு சர்ப்பிரைஸூம் காத்துக் கொண்டிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் டெல்லி பறந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ளது காற்றுக்கென்ன வேலி நாடகம். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. அதே போல் பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'.
வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியை சாரதாவின் உதவியுடன் படிக்க நினைக்கிறார் நாயகி. இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்களைக் கடந்து எப்படி படித்து வெற்றி பெறுகிறார் என்பதும் கல்லூரியில் பேராசிரியரும்,
கல்லூரியின் உரிமையாளருமான ஹீரோவுக்கும் இவருக்கும் எப்படி காதல் வளர்கிறது என்பதும் கதையின் முக்கிய களங்கள்.
Cook With Comali 3 : இதை செய்யாமல் என் உயிர் போகாது.. பாலா உருக்கம்!
காற்றுகென்ன வேலி தொடரின் நாயகனாக நடிகர் சுவாமிநாதன் நடித்து வருகிறார். சூர்யா தர்ஷனுக்கு பிறகு இந்த ரோலில் நடிக்க சுவாமிநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக தற்போது வெண்ணிலா ரோலில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார். கதைப்படி தற்போது வெண்ணிலா , சாரதாவுக்கு துணையாக
சூர்யா வீட்டில் தான் இருக்கிறார். இது மீனாட்சிக்கு பிடிக்கவில்லை. சூர்யாவும் வெண்ணிலா வந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
இப்படி இருக்கையில், இந்த
சீரியலின் அடுத்தக்கட்டமாக வெண்ணிலாவின் பேச்சுப்போட்டி குறித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகவுள்ளன. அதவாது , கல்லூரி பேச்சுப்போட்டியில் ஜெயித்த வெண்ணிலா இறுதிச்சுற்றுக்கு டெல்லி செல்ல உள்ளார். அவரை அழைத்து செல்வது சூர்யா தான். அங்கே சென்று வெண்ணிலா ஜெயித்து கோப்யையை வென்று வருவது தான் அடுத்த 2 வாரத்திற்கான எபிசோடு. இதற்காக சீரியல் குழு ரியலாக இருப்பதற்கு டெல்லிக்கே சென்று ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இதுக் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த எபிசோடுக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.