• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி சீரியலிருந்து பிரபல நடிகர் விலகல்... ஏன் இந்த திடீர் முடிவு?

விஜய் டிவி சீரியலிருந்து பிரபல நடிகர் விலகல்... ஏன் இந்த திடீர் முடிவு?

காற்றுக்கென வேலி சூர்யா

காற்றுக்கென வேலி சூர்யா

கன்னட நடிகர் சுவாமிநாதன், சூர்யாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா?

  • Share this:
    ஹீரோ சூர்ய தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் இருந்து தர்ஷன் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த தொடர் 'தஞ்சை ஆர்.கே' என்பவர் இயக்கத்தில் 'பிரியங்கா குமார்' மற்றும் 'சூர்யா தர்ஷன்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'அபிஷேக் ரெகே' என்பவர் எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இதில், பிரியங்கா, வெண்ணிலா என்ற கதாபாத்திரத்திலும் , சூர்யா தர்ஷன் - சூர்யாவாகவும், மாளவிகா அவினாஷ் - சாரதா என்ற கதாபாத்திரத்திலும், பானு பிரகாஷ் - மகாதேவன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். படிக்கும் வெண்ணிலாவின் ஆசையை புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு தந்தை ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியை சாரதாவின் உதவியுடன் படிக்க நினைக்கிறார்.

    இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்கள் இவை அனைத்தையும் கடந்து எப்படி கல்லூரியில் சேர்கிறாள் வெண்ணிலா, கல்லூரியில் பேராசிரியரும், கல்லூரியின் உரிமையாளருமான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என கதை சுவாரஸ்யமாக செல்கிறது. இதனிடையே வெண்ணிலாவை, சூர்யாவின் இரண்டு தங்கைகளுக்கு பிடிக்காது. அவர்களும் அதே வகுப்பில் படித்து வரும் நிலையில், வெண்ணிலாவை கல்லூரியை விட்டு அனுப்ப திட்டமிடுகின்றனர்.

    இதற்கு வெண்ணிலாவின் அக்கா கணவரும் உடந்தையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் வெண்ணிலாவையும், அவர்களது நண்பர்களையும் ஆள் வைத்து அடித்து விடுகின்றனர். இந்த பிரச்சனை தற்போது பெரிதாகி, சூர்யாவின் தங்கைகள் இருவர் மற்றும் வெண்ணிலாவின் மாமா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கனா காணும் காலங்கள் சீரியல் போன்று இருப்பதால் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குழந்தைகளால் வரும் பிரிவு.. குணம் மாறும் மீனா!

    இந்த சீரியலின் ஹீரோ சூர்ய தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் இருந்து தர்ஷன் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தர்ஷன் சில படங்களில் கமிட்டாகி இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதற்காக இந்த சீரியலை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சூர்யா கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சுவாமிநாதன் நடிக்க உள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கன்னட நடிகர் சுவாமிநாதன், சூர்யாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா? என காத்திருந்து பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: