Home /News /entertainment /

சூர்யாவின் மனசை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலியில் ட்விஸ்ட்!

சூர்யாவின் மனசை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலியில் ட்விஸ்ட்!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுகென்ன வேலி தொடரில் சூர்யாவையும் சாரதாவையும் சேர்த்து வைப்பேன் என்கிறார் வெண்ணிலா.

    காற்றுக்கென்ன வேலி சீரியலில் சாரதாவை அம்மாவாக ஏற்றுக்கொள்ள சூர்யாவின் மனசை மாற்றுக்கிறார் வெண்ணிலா.

    இளைஞர்களுக்கு விருப்பமான சீரியல் பட்டியலில் இருக்கும் ’காற்றுக்கென்ன வேலி’ தொடரில்  பெரியம்மா மீனாட்சியால் சொந்த அம்மாவை வெறுக்கிறார் சூர்யா. இதனால் அவரை அம்மா என்று சொல்லாமல் ஒதுக்கி வைக்கிறார்.  சாரதா - சூர்யா இருவரையும் பிரித்து சூர்யாவை மட்டும் தன்னுடன் வைத்துக் கொள்கிறார் மீனாட்சி. மகன் பாசத்திற்காக ஏங்குகிறார் சாரதா. இதனால் வெண்ணிலா எப்படியாவது சூர்யாவையும் சாரதாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். டெல்லிக்கு இருவரும் சென்ற நேரத்தில் கூட சூர்யாவை சாரதாவுக்காக புடவை வாங்க வைத்து, அதை அவர் கையால் சாரதாவுக்கு கொடுக்க வைத்தார்.

    பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?

    இப்படி இருக்கையில், நேற்றைய எபிசோடில் ரவுடிகள் வெண்ணிலாவை கிண்டலடிக்க அதை சாரதா தட்டி கேட்கிறார். அதை பார்த்த சூர்யா ரவுடிகளிடம் சண்டைக்கு போகிறர். அதுமட்டுமில்லை அந்த ரவுடிகளிடம் தன்னை அறியாமல் ’அவங்க என் அம்மா’ என சொல்லி விடுகிறார். இந்த சதோஷத்தை சாரதாவால் விவரிக்க முடியவில்லை. இன்றைய எபிசோடில் அதன் தொடர்ச்சியாக சூர்யாவிடம் போய் பேசுகிறார் வெண்ணிலா.

    15 வருட உழைப்பு.. விஜய் டிவி அமுதவாணனுக்கு நடிகர் சத்யராஜ் கொடுத்த அங்கீகாரம்!

    சூர்யாவின்  வார்த்தைகள் அவரின் மனதில் இருந்து வந்தவை என்பது வெண்ணிலாவுக்கு தெரியும். ஆனால் அதை மறுக்கிறார் சூர்யா. அதுமட்டுமில்லை ரவுடிகளிடம் பிரச்சனை வேண்டாம் என்ற காரணத்தினால் தான் சாரதாவை அம்மா என அழைத்தேன் எனவும் கூறுகிறார். ஆனால் வெண்ணிலா இதை நம்பவில்லை. கூடிய விரைவில் சூர்யாவையும் சாரதாவையும் சேர்த்து வைப்பேன் என்கிறார். வெண்ணிலாவின் பேச்சு சூர்யாவை கொஞ்சம்  கொஞ்சமாக  மாற்றுகிறது.

    அதுமட்டுமில்லை தன்னை அறியாமல் அம்மா மீது பாசம் காட்ட தொடங்குகிறார் சூர்யா. இது மட்டும் வில்லி மீனாட்சிக்கு தெரிந்தால் சாமி ஆடி விடுவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி