ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியலில் திடீர் திருப்பம்.. புது நடிகரை அறிமுகம் செய்யும் சீரியல் குழு

விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியலில் திடீர் திருப்பம்.. புது நடிகரை அறிமுகம் செய்யும் சீரியல் குழு

விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி

விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் தர்ஷன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரை சீரியல்களில் தற்போது கல்லூரி வாழ்க்கை சார்ந்த ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது காற்றுக்கென்ன வேலி சீரியல் தான். இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப எடுத்துரைத்து வருகிறது.

  இந்த சீரியலில் அப்பாவை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் காலப்போக்கில் கல்லூரி பேராசிரியர் சூர்யாவை காதலிக்க துவங்குகிறார். இவர்களது காதல் கை கூடுமா என்பதன் பின்னணியை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  அதன் பிறகு, இந்த சீரியலில் சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் தர்ஷன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

  இதையும் படிங்க.. சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

  ஏற்கனவே வெண்ணிலா மற்றும் சூர்யா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், நடிகர் தர்ஷனின் திடீர் விலகல் சீரியலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும், அவருக்கு பதிலாக, தற்போது சூர்யா கதாப்பாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன் மிதுன ராசி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் தனது நடிப்பால் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் இந்த சீரியல் ஆரம்பமான போது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பட்டது. அதன்பிறகு இந்த சீரியல் மதியம் 1 மணிக்கு மாற்றப்பட்டது.

  இதையும் படிங்க.. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  விஜய் டிவியில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புத்தம் புதிய சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே காற்றுக்கென்ன வேலி சீரியல் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்னொரு மாற்றம் இந்த சீரியலில் கொண்டு வரப்பட இருக்கிறது. அதாவது புதிதாக ஒரு கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சீரியல் குழு தெரிவித்துள்ளது. சூர்யாவின் பள்ளி தோழனாக புதிய ஒரு நபர் நடிக்க வருகிறார். அவர் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பெயர் ஹரிஷ் ஆகும். இந்த தொடரில் சூர்யாவின் பள்ளி தோழனாக இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv