ஒரு சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடங்களில் வரவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல புள்ளிகளைப் பெறுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு சேனலிலும் குறைந்தபட்சம் 15 சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியல்களுக்கு இடையே பயங்கரமான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமையில் ஒரு சீரியல் 300 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மனதில் தொடர்ந்து இடம்பெற்று வருவது ஒரு சாதனையாகும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது 300 வது எபிசோடை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வெற்றியை சீரியல் குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் '
காற்றுக்கென்ன வேலி'
இதையும் படிங்க.. சன் டிவி செய்தி வாசிப்பாளருக்கு ரசிகர்களிடம் இருந்து இப்படியொரு கோரிக்கையா?.
வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியை சாரதாவின் உதவியுடன் படிக்க நினைக்கிறார் நாயகி. இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்களைக் கடந்து எப்படி படித்து வெற்றி பெறுகிறார் என்பதும் கல்லூரியில் பேராசிரியரும், கல்லூரியின் உரிமையாளருமான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என்பதும் கதையின் முக்கிய களங்கள்.
காற்றுகென்ன வேலி தொடரின் முதலில் நாயகனாக சூர்ய தர்ஷன் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சூர்யா சீரியலில் இருந்து வெளியேறினார், சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சுவாமிநாதன் காற்றுக்கென்ன வேலியில் நாயகனாக நடித்து வருகிறார். சூர்யா தர்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர், எனவே சூர்யாவின் இடத்தை சுவாமிநாதன் நிரப்புவாரா, சீரியல் ஹிட் ஆகுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!
அதே போல, சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது மீனாட்சியாக நடிப்பவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுஜாதா பஞ்சு தான். அதே போல, ஹீரோயின் படிப்புக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரில் நடித்து வந்த மாளவிகாவும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.
இடையில், மாணவி
ஆசிரியர் மேல் காதல் வயப்படும் காட்சிகள் தவறான உதாரணமாக உள்ளன என்றெல்லாம் ரசிகர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். சீரியல் தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது என்று கமென்ட் செய்தனர். ஆனால், எல்லாத் தடைகளையும் மீறி, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.