Home /News /entertainment /

நடுவர் குழு பாரபட்சமானது - விஜய் டிவியை வெளுத்து வாங்கி சவால் விட்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை

நடுவர் குழு பாரபட்சமானது - விஜய் டிவியை வெளுத்து வாங்கி சவால் விட்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

மற்ற சீரியல்களை விளம்பரப்படுத்துவது போல் விஜய் டிவி ஏன் காற்றுக்கென்ன வேலியை விளம்பரப்படுத்துவதில்லை?? ஏன் காற்றுகென்ன வேலி குழுவை, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதில்லை??

    விருது வழங்குவதில் விஜய் டிவி-யின் நடுவர் குழு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை மரகதம்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு முதல் தொடர்ந்து விஜய் டிவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது 7வது விஜய் டிவி விருதுகள் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விஜய் டி.வி. சீரியல்களுக்கு மட்டுமின்றி ஷோக்கள், விஜய் டி.வி. ஆங்கர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான விருதுகளைப் பெற்றது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களும் விருதுகளைப் பெற்றன.

    இந்நிலையில் விஜய் டிவி-யின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மரகதம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷியமளா தனது கையில் விருது இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “போட்ருக்க ட்ரெஸ் என்னுது தான் ஆனா புடிச்சிருக்க அவார்டு என்னுது இல்ல. விஜய் விருது விழாவில் கலந்து கொண்ட பிறகு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. நான் ஒவ்வொரு பதிவிலும் சொல்லிக் கொண்டிருக்கும் எனது 'காற்றுக்கென்ன வேலி’ தொடரை நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். அது விஜய் டிவியில் மதியம் 1 மணிக்கு வருகிறது. ஆனால் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது, ​​​​அரங்கம் முழுவதும் காற்றுக்கென்ன வேலியின் ஒரு போஸ்டர் கூட இல்லை. நாங்கள் கடைசி பெஞ்சர்களாக இருந்தோம், ஒரு விருது கூட பெறவில்லை.

    தளபதி 66-ல் ராஷ்மிகா மந்தனா, எஸ்.எஸ்.தமன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வெளியில் இருந்து பார்த்த வரையில், காற்றுக்கென்ன வேலி தொடர் நான் பார்த்த பெரும்பாலான தொடர்களை விட மிகச் சிறந்தது, பிறகு ஏன் இந்த பாரபட்சமான நடுவர் மன்றம்? யாரும் பார்க்க விரும்பாத கருப்பு ஆடுகளா நாங்கள்? மற்ற சீரியல்களை விளம்பரப்படுத்துவது போல் விஜய் டிவி ஏன் காற்றுக்கென்ன வேலியை விளம்பரப்படுத்துவதில்லை?? ஏன் காற்றுகென்ன வேலி குழுவை, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதில்லை?? நீங்கள் இதை ஒரு வயதான பெண்மணியின் கூச்சலாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது தீவிரமாக யோசித்து ஏதாவது செய்யலாம். எங்கள் இருப்பை உணர்த்த வேண்டும். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள். நாங்கள் விதியின் வேண்டாத பிள்ளைகள் அல்ல.

    சன் டிவி சீரியலில் இருந்து பிரபல வில்லி விலகல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்



     




    View this post on Instagram





     

    A post shared by Shammi (@imshyamala)






    கயல் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... இனி மராத்தியிலும் பார்க்கலாம்!

    எல்லாம் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தால், எங்களுக்கு ஒரு பிரைம் டைம் ஸ்லாட்டை வழங்கி, நாங்கள் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறோம் என்பதை பார்க்கும்படி விஜய் டிவி-யிடம் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் உண்மையான போட்டி மனப்பான்மை. இந்த சவாலை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி