Home /News /entertainment /

சூர்யாவிடம் மாட்டிய மீனாட்சி...காற்றுக்கென்ன வேலி தொடரில் சாரதா கண்டுபிடித்த உண்மை என்ன?

சூர்யாவிடம் மாட்டிய மீனாட்சி...காற்றுக்கென்ன வேலி தொடரில் சாரதா கண்டுபிடித்த உண்மை என்ன?

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

சூர்யா மற்றும் வெண்ணிலாவின் காதல் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக விஜய் டிவி தொடர்களில் பல மக்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது. விதவிதமாக நிறைய தொடர்கள் இருந்தாலும் அவற்றில் சில மட்டுமே குறுகிய காலத்தில் பிரபலமாகி விடுகின்றன. அதே போன்று அவை டாப் சீரியல்களில் ஒன்றாகவும் மாறி விடுகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரும் பலருக்கும் பிடித்த ஒன்றாகும். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. இதில் சூர்யா மற்றும் வெண்ணிலாவின் காதல் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.

    குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த தொடருக்கென்று தனி இடம் உண்டு. இதன் காரணமாகவே இந்த சீரியல் ஹிட்டாகி வருகிறது. அதே போன்று ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் புது புது திருப்பங்கள் வந் தவண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று ஒளிபரப்பாக உள்ள சீரியலிலும் புதிய திருப்பங்கள் வரவுள்ளன. இதை புரோமோ மூலம் தெரியப்படுத்தி உள்ளனர். அதன்படி, நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக சில உண்மைகள் வெளியாக உள்ளன.

    இதையும் படிங்க.. சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

    சூர்யா சாரதாவை அம்மா என்று ஏற்றுக்கொள்ளவே கூடாது என மீனாட்சி நினைத்து வந்தார். அதன்படி இதுவரை பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வந்தார். இந்த மோசமான சூழ்ச்சிகள் பற்றி எல்லாம் சூர்யாவிற்கு இதுவரை தெரிய வந்ததில்லை. ஆனால், தற்போது முதல் முறையாக இது குறித்த உண்மைகள் தெரிய வருகிறது. வெண்ணிலா, சாரதா குணமாக சில விஷயங்கள் செய்ய அதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக சூர்யா அவரை மிக பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். இந்த காட்சிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருந்தது.

    இதையும் படிங்க.. சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

    தற்போது வெண்ணிலாவின் இந்த நிலைமைக்கு மீனாட்சி தான் காரணம் என்று சாரதா கண்டுபிடித்து விட்டார். அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியப்படுத்த அங்கு கிளம்பி செல்கிறார். மீனாட்சியின் இது வரை நல்லது செய்வது போல நடிப்பதாகவும், அவர் தான் வெண்ணிலாவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்று கூறுகிறார். அடுத்து அதற்கான ஆதாரங்களை அவர்களின் முன்பும் காட்டுகிறார். இதை பார்த்ததும் எல்லோரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர்.

    பெரியம்மா செய்த விஷயம் சூர்யாவை மிகவும் கோபப்படுத்தி விடுகிறது. இதை அறிந்ததும் அதிர்ச்சியாகி தனது வருத்தத்தை வெளிக் காட்டுகிறார். தனது அம்மா தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளார் என்று இவ்வளவு நாளாக சூர்யா நினைத்து வந்திருந்தார். ஆனால், தற்போது கடவுள் என்று நினைத்த வந்த பெரியம்மா இப்படி செய்ததால் அவர்மீது சூர்யாவிற்கு அதிக கோபம் ஏற்படுகிறது. எனவே இனி சாரதா மீது சூர்யாவின் அன்பும் கவனமும் ஏற்படுமா, இதனால் இனி வரும் எபிசோட்களில் அம்மா-மகன் காட்சிகள் ஒளிபரப்பாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி