ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியல் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன அடுத்த சோகமான செய்தி!

சீரியல் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன அடுத்த சோகமான செய்தி!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

சீரியலின் நேர மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரை சீரியல்களில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு தான். சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான கதாநாயகன் நாயகி மற்றும் வில்லன் பாத்திரங்கள் உட்பட சீரியலில் தொடர்ந்து வரும் துணைப்பாத்திரங்களும் அவ்வபோது மாற்றத்துக்கு உள்ளாகும். சீரியல் கதைக்களம் ஹிட் ஆகவில்லை என்றாலோ ரசிகர்கள் விரும்பவில்லை என்றாலோ, திரைக்கதை ஆசிரியரையும் டைரக்டரையும் மாற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், காற்றுக்கென்ன வேலி சீரியல் தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட மாற்றங்களைச் ரசிகர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

  தற்போது காற்றுவெளியில் சீரியல் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கும் மற்றொரு மாற்றம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

  காற்றுக்கென்ன வேலி சீரியல், ரசிகர்களை கவரும் வகையில் கதைக்களமும் கதாபாத்திரங்களும் வடிவைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோயின் எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற முனைப்போடு தன்னுடைய கல்விக்கு ஏற்படும் தடைகளை உடைத்து வருவதையே கதைக்களமாக அமைத்துள்ளனர். இதனால் இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

  சீரியலில் நாயகனாக நடித்து வந்த தர்ஷன் சீரியல் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக ரசிகைகள் எண்ணிக்கை அதிகம். ஆனால், சீரியல் குழு செய்த மாற்றங்களைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். தர்ஷனுக்கு பதிலாக சுவாமிநாதன் என்ற கன்னட நடிகர் நாயகனாக நடித்து வருகிறார்.

  அதன் பிறகு கதாநாயகனின் அம்மா கேரக்டரில் பன்முகக் கலைஞர் மாளவிகா அவினாஷ் நடித்து வந்தார். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் மிகவும் பிரபலமான நடிகை. தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மிகச் சிறந்த நடிகைகளில் மாளவிக்க அவினாஷும் ஒருவர்.

  மேலும், ஹீரோயின் படிப்புக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரில் நடித்து வந்த மாளவிகாவும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் ஏன் வெளியேறினார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தற்போது நடித்து வருகிறார். மாளவிகா அவினாஷ் வெளியேறியதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை மாற்றங்களைக் கடந்தும், சீரியல் தொடர்ந்து ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால், தற்போது சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம், ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளது என்று கூறலாம்

  தற்போது அடுத்த மாற்றமாக இனி காற்றுக்கென்ன வேலி சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை காற்றுக்கென்ன வேலி சீரியல் தொடங்கிய நாளிலிருந்து மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தநிலையில் தற்போது மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜபார்வை சீரியலுக்கு பதிலாக, காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர். சீரியலின் நேர மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை. நேரம் மாறினாலும் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv