விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் விஜய் டிவியை மறைமுகமாக சாடி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் காற்றுகென்ன வேலி சீரியலுக்கு ஒரு விருது கூட வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை இணையத்தில் பயங்கரமாக வெடித்தது. அதாவது விருது விழாவில் சீரியலுக்கு எந்த புரமோஷனும் விஜய் டிவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் அந்த சீரியலில் நடித்த மூத்த நடிகை ஒருவர் பதிவு செய்து இருந்தார். இதை ரசிகர்களும் முன்மொழிந்து இருந்தனர். அதாவது, காற்றுக்கென்ன வேலி சீரியல் பலரும் விரும்பும் சீர்யலாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
வெண்பா – யாழினி பற்றிய உண்மை தெரிய வரும் நேரம்.. சித்தி 2 வில் ட்விஸ்ட்!
இப்படி இருக்கையில், காற்றுக்கென்ன வேலி சீரியல் மிகப் பெரிய சாதனையை நிகழ்ச்சியுள்ளது. அதாவது, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மதிய சீரியல்கள் வரிசையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் டி.ஆர்.பியில் முதலிடத்தில் வந்துள்ளது. இணையத்தில் இப்படியொரு சர்ச்சை வெடித்திருக்கும் நேரத்தில் சீரியல் டி.ஆர்.பி ரேங்கில் முதலிடத்தில் வந்திருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதை வைத்து, ரசிகர்கள் மறைமுகமாக விஜய் டிவியை தாக்கி பேசியுள்ளனர். அதுமட்டுமில்லை எல்லா சீரியல்களையும், நடிகர் நடிகைகளையும் ஒரே மாதிரி ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சியை எப்படி தாங்க போகிறார் சஹானா? கலங்கி நிற்கும் சிவா!
நகர்புறம் மற்றும் கிராமங்களில் சேர்த்து காற்றுக்கென்ன வேலி சீரியலில் மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் மற்ற விஜய் டிவி சீரியல்களை ஓரங்கட்டியுள்ளது. மதிய நேரத்தில், வேலைக்காரன், நம்ம வீட்டு பொண்ணு, பாவம் கணேசன் போன்ற சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.