முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்!

’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலியில் வெண்ணிலாவை யார் காப்பாற்றுவார்? கடைசி நேரத்தில் என்ன நடக்கும்?

  • Last Updated :

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. வெண்ணிலா ஜெயிக்க கூடாது என்பதற்காக இந்த அளவுக்கா அபி செல்வார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ளது காற்றுக்கென்ன வேலி நாடகம். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தற்போது டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் எபிசோடை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து வருகின்றனர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் அடுத்த அதிரடி திருப்பமாக வெண்ணிலாவை கடத்துகிறார் அபி.  சீரியலில் தற்சமயம் வெண்ணிலாவின் டெல்லி பேச்சுப்போட்டி எபிசோடுகள் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

அந்த விஷயம் தான் காரணமா? முடிவுக்கு வரும் பிரபல சீரியல்!

வெண்ணிலாவுடன் சூர்யாவும் டெல்லி வந்துள்ளார். இந்த போட்டியில் எப்படியாவது வெண்ணிலா ஜெயிக்க வேண்டும் என சூர்யா எல்லா உதவிகளையும் செய்கிறார். வெண்ணிலாவின் காதலனாக, கல்லூரி பேராசிரியராக சூர்யா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ரசிக்க வைக்கிறது. இப்படி இருக்கையில், அபிக்கு அந்த போட்டியில் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம். இதனால் குப்தா என்ற ரவுடி மூலம் வெண்ணிலாவை கடத்த பிளான் செய்கிறார்.

துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா – டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!

வெண்ணிலாவை போட்டியில் காணவில்லை என்றால், காலேஜ் மானத்தை காப்பாற்ற அபி மேடை ஏறுவார் என்பது தான் பிளான். எனவே வெண்ணிலாவை குப்தா ஆள் வைத்து கடத்தும் காட்சிகள் அனைத்தும் வரும் நாட்களில் சீரியலில் ஒளீப்பரப்பாகும். இந்த ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆவலுடன் எபிசோடுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமடுமில்லை வெண்ணிலாவை யார் காப்பாற்றுவார்? கடைசி நேரத்தில் என்ன நடக்கும்? உண்மை தெரிந்த பிறகு சூர்யா அபியை என்ன செய்வார்? என அடுத்தடுத்த ஏகப்பட்ட ட் விஸ்டுகள் வரவுள்ளன. அதற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: TV Serial, Vijay tv