Home /News /entertainment /

’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலாவுக்காக சூர்யா செய்த காரியம்!

’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலாவுக்காக சூர்யா செய்த காரியம்!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலியில் வெண்ணிலாவுக்கு பாராட்டு விழா நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதே சூர்யா தான்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியல் முழுக்க முழுக்க இளைஞர்களின் உலகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி, நண்பர்கள், பரீட்சை, போட்டி, பொறாமை, காதல் என இந்த சீரியல் இந்த கால இளைஞர்களின் வாழ்வியலை கண்முன் கொண்டு வருவதால் காற்றுகென்ன வேலி சீரியல் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணான வெண்ணிலாவை சுற்றிய தான் காற்றுகென்ன வேலி தொடரின் கதை இருக்கிறது.

    இப்போது வெண்ணிலா சூர்யா வீட்டில் தான் தங்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இருவரும் டெல்லி சென்று வந்தனர். டெல்லியில் நடைப்பெற்ற பேச்சு போட்டியில் வெண்ணிலா கலந்து கோண்டு வெற்றியாளர் ஆனார். வெண்ணிலாவின் இந்த வெற்றிக்கு சூர்யா மிகவும் உதவியாக இருந்தார். அதே போல் சூர்யா, வெண்ணிலாவை காதலிப்பது வில்லி மீனாட்சிக்கு தெரிந்து விட்டது. சூர்யா வாழ்க்கையில் இருந்து சாரதாவை மொத்தமாக அனுப்பி விட வேண்டும் என்று மீனாட்சி நினைத்தார். ஆனால் கடைசியில் சாரதாவுடன் வெண்ணிலாவும் தற்போது அதே வீட்டில் தங்கியுள்ளனர்.

    6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?

    இந்த பேச்சு போட்டியில் வெண்ணிலா ஜெயிக்க கூடாது என்று அபி பல சதித்திட்டங்களை போட்டார். ஆனால் கடைசியில் ஜெயித்தது வெண்ணிலா தான். இப்படி இருக்கையில், கல்லூரி சார்பாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெண்ணிலாவுக்கு சூர்யா மிகப் பெரிய சர்ப்பிரைஸ் தரப்போகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    கல்லூரியில் கூடிய விரைவில் வெண்ணிலாவுக்கு பாராட்டு விழா நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதே சூர்யா தான். இந்நிலையில், இதற்கான சூட்டிங்க் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தில் மீனாட்சி, சாரதா என மொத்த குடும்பமும் உள்ளனர். கல்லூரியில் நடத்தப்படும் இந்த பாராட்டு விழாவில் வெண்ணிலாவும் கலந்து கொள்கிறார். இதுதான் அடுத்த வாரம் சீரியலில் வரபோகும் முக்கிய திருப்பம் ஆகும்.

    யுவன் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க போகும் சன் டிவி!

    கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் அபியும்  மீனாட்சியும் சேர்ந்து எதாவது குழப்பத்தை ஏற்படுத்துவர்கள் அது என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி