2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மாடல் அழகியானவர் பிரியங்கா குமார். பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். கன்னட தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி தொடரில் துளசி கேரக்டரில் நடித்தார்.
இதில் பிரியங்கா குமாரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து சன் தொலைக்காட்சியில் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற போதும் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!
அதன் பின்னர் விஜய் டி.வியில் காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுடன் இணைந்து வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கல்லூரி மாணவி வெண்ணிலாவாக பிரியங்கா குமாரும், ஆசிரியராக சூர்யாவும் நடித்து வருகின்றனர். கல்லூரி கதை அம்சத்துடன் ஒளிப்பரப்பாகி வருவதால் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
எல்லா சீரியல் நடிகைகளைப் போலவே பிரியங்கா குமாரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருகிறார். விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி தனது கவர்ச்சி போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார். சில சமயங்களில் அநியாயத்திற்கு ஓவர் கிளாமர் காட்டி பிரியங்கா குமார் பதிவிடும் போட்டோஸ் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்டு.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா!
தற்போது அப்படியொரு சர்ச்சையான போட்டோவை தான் பதிவிட்டுள்ளார். கோர்ட் போன்ற மேலாடை அணிந்திருக்கும் பிரியங்கா குமார், பேண்ட் அணியாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து பிரியங்காவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
20 வயதான பிரியங்கா குமாருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை உள்ளது. எனவே தான் சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, சினிமா வாய்ப்பிற்காக வலை வீசி வருகிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். இது என்ன மாதிரியான டிரஸ், கவர்ச்சி காட்டுவதற்கு ஒரு அளவில்லையே என பிரியங்கா குமாரை ரசிகர்கள் சகட்டுமேனிக்கு சாடி வருகின்றனர்.
பிரியங்கா குமாரின் இந்த கவர்ச்சி போட்டோ அதேசமயத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 15 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருகிறது. அத்தோடு சூப்பர், ஹாட் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அடர் சிவப்பு நிற குட்டை உடையில் செம்ம ஹாட்டாக பிரியங்கா குமார் வெளியிட்ட போட்டோஸ் தாறுமாறு வைரலானதோடு சர்ச்சையையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.