Home /News /entertainment /

காற்றுக்கென்ன வேலியில் சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வெண்ணிலா!

காற்றுக்கென்ன வேலியில் சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வெண்ணிலா!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்யாவுடன் பேசுவதை தவிர்க்கிறார் வெண்ணிலா

    காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யாவை பார்க்காமல் ஓடி மறைகிறார் வெண்ணிலா. காலேஜ் முழுவதும் தேடி தேடி பார்க்கும் சூர்யாவுக்கு கடைசியில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் .

    இளைஞர்களின் ஃபேவரெட் சீரியலான காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்யா - வெண்ணிலா லவ் ட்ராக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இணையத்தில் பயங்கர ஹிட். சீரியல் கதைப்படி வெண்ணிலா - சூர்யா இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் இருக்கிறது. இந்த விஷயம் சாரதாவுக்கும் தெரியும். அதே போல் மீனாட்சிக்கும் தெரியும். இந்த நேரத்தில் தான் மீனாட்சி வெண்ணிலாவின் அப்பாவிடம் சூர்யா - வெண்ணிலா பற்றி தப்பு தப்பாக சொல்லிவிடுகிறார். இதனால் அவர் இனிமேல் சூர்யாவுடன் பேச கூடாது என்று சொல்லி வைக்கிறார்.

    சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

    இதுப்போன்ற பல காரணங்களை மனசில் வைத்துக் கொண்டு சூர்யாவுடன் பேசுவதை தவிர்க்கிறார் வெண்ணிலா. இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரியாது. காலேஜில் வெண்ணிலாவை பார்க்க முடியவில்லை என்று சூர்யா சுற்றி  சுற்றி அலைகிறார். சூர்யாவை பார்த்ததும் ஓடி மறைந்து விடுகிறார் வெண்ணிலா. இப்படி இருக்கையில் நாளைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    வழக்கம் போல் சூர்யா, வெண்ணிலாவை தேடி அலைகிறார். காலேஜ் சார்பாக விருது ஒன்றுக்கு சூர்யா தேர்வாகி இருக்கிறார். இதை பற்றி வெண்ணிலாவிடம் ஷேர் செய்ய நினைக்கிறார். ஆனால் வெண்ணிலா அவரிடம் பேசாமல் மறைந்து விடுகிறார். பின்பு வெண்ணிலாவின் நண்பர்கள் சூர்யா அவரை தேடுவதற்கான காரணத்தை கூறுகின்றனர். உடனே இரவு சூர்யாவை தேடி போய் பேசி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் வெண்ணிலா. இந்த காட்சிகள் நாளைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி