காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யாவையும் சாரதா அம்மாவையும் சேர்த்து வைக்க வெண்ணிலா எடுக்கும் முயற்சி பற்றி மீனாட்சிக்கு தெரிந்து விட்டது. இன்றைய எபிசோடில் எரிமலையாய் வெடிக்கிறார்.
விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் லிஸ்டில் டாப் ரேட்டிங்கில் செல்வது காற்றுக்கென்ன வேலி தொடர். இதில் சூர்யா - வெண்ணிலா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. காலேஜ், காதல், நட்பு என இளைஞர்களை கவரும் வகையில் சீரியல் செல்வதால் இந்த தொடரை இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். இதற்கு அவர்கள் தரும் ஆதரவை சமூகவலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
டெல்லிக்கு சென்று திரும்பிய சூர்யாவும் வெண்ணிலாவும் தற்போது இன்னும் நெருக்கம் ஆகியுள்ளனர். சாரதாவுக்கு துணையாக சூர்யா வீட்டில் தங்கி இருக்கிறார் வெண்ணிலா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் டெல்லியில் வாங்கிய புடவையை சாரதாவிடம் கொடுக்கிறார். சந்தோஷத்தில் சாரதா கண்ணீர் விடுகிறார். சாரதா பெயரை கேட்டாலே வெறுப்பை காட்டும் சூர்யாவா? இப்படி என ஆச்சரியப்படுகிறார் சூர்யாவின் அப்பா.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் வெண்ணிலா தான் என்பது சாரதாவுக்கு தெரியும். இதனால் வெண்ணிலாவை கட்டிபிடித்து நன்றி சொல்கிறார் சாரதா. அதே போல், சூர்யா வெண்ணிலா ரூமுக்கு வந்து வெண்ணிலாவுக்காக வாங்கிய புடவையை மீண்டும் கொடுக்கிறார். இந்த முறை வெண்ணிலா அதை வாங்கி கொள்கிறார். இது எல்லாவற்றையும் ரூமுக்கு வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் மீனாட்சி. அவருக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. சூர்யாவை பிரித்து விடுவார்கள் என நினைத்து கோபத்தில் குதிக்கிறார்.
இதையும் படிங்க.. சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்
ஆனால் பதிலுக்கு வெண்ணிலா, மீனாட்சிக்கு தகுந்த பதிலடி கொடுத்து வெளியே அனுப்புகிறார். அதுமட்டுமில்லை கூடிய விரைவில் சூர்யாவை சாரதா அம்மாவுடன் சேர்த்து வைக்கிறேன் என சபதமும் விடுகிறார். சீரியலில் இனி வரும் நாட்களில் வெண்ணிலா vs மீனாட்சி காம்போவை எதிர்பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.