காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாறன் ரோலில் நடித்த ராகவேந்திரன் புலி காதல் தோல்வியில் தற்கொலை முயற்சி செய்ததாக இணையத்தில் வதந்திகள் பரவிய நிலையில் இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகவேந்திரன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆன ராகவேந்திரன் புலி தற்போது சின்னத்திரையை விட்டு ஒதுங்கி விட்டார். இந்த தகவலை அவரே பேட்டி மூலம் உறுதிப்படுத்தி இருந்தார். கடைசியாக இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்தார், சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகினார். இந்த சீரியலில் இவர் வெண்ணிலாவின் கல்லூரி நண்பராக மாறன் என்ற ரோலில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நடிகருடன் காதல் வதந்தி.. இந்த நேரத்தில் ’ராஜா ராணி’ அர்ச்சனா போட்ட போஸ்ட்!
அதன் பின்பு சம்பளம் குறைவு, வாய்ப்பு இல்லை, ரோலில் முக்கியத்துவம் இல்லை என பல காரணங்களை சுட்டிக்காட்டி சீரியலில் இருந்து விலகினார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலைக்கு செல்வதாக, சினிமா தன்னை ஏமாற்றி விட்டதாக மிகவும் உருக்கமாக தெரிவித்து இருந்தார். அதுமட்டுமில்லை பல ஏமாற்றங்களுக்கு பிறகு இவர் டிப்ரஷனில் இருப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராகவேந்திரன் புலி கடந்த வாரம், தனது இன்ஸ்டா பக்கத்தில் "ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடமும் டேமேஜ் , நல்லா இருமா என்னா கொடுமைடா" என்று கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ அவரின் வீட்டில் எடுக்கப்பட்டது. அந்த போஸ்ட்டுக்கு ரசிகர்கள் சில பாசிடிவ்வான கமெண்டுகளை பதிவு செய்து இருந்தனர். ஆனால் அதற்குள் அவர் தற்கொலை முயற்சி செய்து, ஆஸ்பிட்டலில் இருப்பதாக வதந்திகள், செய்திகள் இணையத்தில் உலா வர தொடங்கின. அவர் மிகவும் ஜாலியாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட அந்த போஸ்ட் சீரியஸான விஷயமாக மாற்றப்பட்டது.
COOK WITH COMALI : பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இறுதி போட்டி.. வெற்றியாளர் யார்?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ராகவேந்திரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “ 2 நாட்களுக்கு முன்பு ஒருதலைக்காதல் பிரேக் அப் என்று நான் வெளியிட்ட வீடியோ ஜாலியாக செய்த ஒன்று. அதற்காக நான் தற்கொலை முயற்சி செய்து, ஆஸ்பிட்டலில் இருக்கிறேன் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதை பார்த்து ஷாக் ஆகிவிட்டேன். என் குடும்பத்தில் இருப்பவர்களும் அதை படித்துவிட்டு நொந்து போனார்கள்.
நான் ஏன் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும், அதுவும் இதுப்போன்ற விஷயத்துக்காக, நிச்சயம் கிடையாது அது வதந்தி மட்டுமே யாரும் நம்ப வேண்டாம். நான் டிப்ரஷனில் இருப்பது உண்மை தான் ஆனால் தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. இதுப்போன்ற தவறான தகவலை பரப்பாதீர்கள். இது பலருக்கும் தவறான உதாரணமாக மாறிவிடும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். சோஷியல் மீடியாவில் விளையாட்டு வினையாகும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.