ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றியின் சஸ்பென்ஸ் திரில்லர் ’ஜோதி’ திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

வெற்றியின் சஸ்பென்ஸ் திரில்லர் ’ஜோதி’ திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

ஜோதி திரைப்படம்

ஜோதி திரைப்படம்

திகிலும், மர்மமும் கலந்த இத்திரைப்படத்தின் கதையமைப்புகளும், அதிரடி நிகழ்வுகளும் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டுவந்து நிறுத்திவிடும்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரில்லர் திரைப்படமான ஜோதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 16 ஞாயிறு அன்று டெலிகாஸ்ட் ஆகிறது. 

திருப்பங்களையும், அதிரடி நிகழ்வுகளையும் கொண்ட, திகிலூட்டும் மர்ம கதையான ஜோதி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை,  ஞாயிறு அக்டோபர் 16 பிற்பகல் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டுகளியுங்கள். இத்திரைப்படத்தில் நடிகர் வெற்றி மற்றும் நடிகை ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திகிலும், மர்மமும் கலந்த இத்திரைப்படத்தின் கதையமைப்புகளும், அதிரடி நிகழ்வுகளும் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டுவந்து நிறுத்திவிடும் என்பது நிச்சயம்; ஞாயிறு, அக்டோபர் 16 பிற்பகல் 2 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டியூன் செய்யுங்கள்.

சூப்பர் சிங்கர் ஜோடி அஜய் கிருஷ்ணா - ஜெஸி வீட்டில் விசேஷம்! குவியும் வாழ்த்துக்கள்

ஏவி கிருஷ்ண பரமாத்மாவின் சிறப்பான இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் கிரிஷா குருப், நடிகர் மைம் கோபி, மற்றும் நடிகர் இளங்கோ குமரவேல் ஆகிய திறமையான நடிகர்களும் துணை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தாயாகும் பெரு விருப்பத்தைக் கொண்டிருக்கும் கருவுற்ற ஒரு பெண் அவளது குழந்தையை இழந்து விடும் சோக நிகழ்வை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் இத்திரைக்கதை, மிக நேர்த்தியான திரைப்படமாக மிளிர்கிறது ஜோதி. பிரபல பாடகர் கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் மனதை வருடும் குரலில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் இத்திரைப்படத்தின் சிறப்பை இன்னும் அதிகமாக உயர்த்தியிருக்கின்றன.

கருவுற்ற தாயான அருள்ஜோதி (நடிகை ஷீலா ராஜ்குமார்) என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்காக கர்ப்பிணி பெண்ணான மனைவியை விட்டுவிட்டு அவளது கணவர் வெளியே செல்வதை தொடக்கக் காட்சியாக இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. அவர் வெளியேறிய சிறிது நேரத்திற்குள்ளேயே இப்பெண்ணின் வீட்டிற்குள் நுழையும் ஒரு மர்ம நபரை கருவுற்ற இப்பெண் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கொடூர நபரின் தாக்குதலில் அருள்ஜோதி மயக்கமடைந்து உணர்விழக்க பிறக்கும் பச்சிளங்குழந்தையை அந்நபர் திருடிச் செல்வதோடு இரத்த வெள்ளத்தில் உயிரிழக்குமாறு விட்டுவிட்டு செல்கிறான். இந்த நிலையில் அருள்ஜோதி என்ற அந்த தாய் உயிர் பிழைக்கிறாளா மற்றும் உயிர் பிழைத்தால் அவளிடமிருந்து கவரப்பட்ட குழந்தையை திரும்பவும் எப்போதாவது கண்டுபிடிக்க முடியுமா என்பது இத்திரைக்கதையின் எஞ்சிய பகுதியாக விரிகிறது.

jothi movie Colors Tamil to present world television premiere suspence and thriller movie jothi on colors tamil
ஜோதி

இது தொடர்பாக இத்திரைப்படத்தின் இயக்குனர் பேசுகையில், “நிஜ வாழ்க்கை சம்பவங்களிலிருந்து தான் இக்கதையின் கரு கிடைத்தது. ஆசையோடு பெற்றெடுத்திருக்கும் குழந்தைகள் திருடப்படும்போது வார்த்தைகளில் விவரிக்கமுடியாத பெரும் வேதனையை அனுபவிக்கும் தாய்மார்களின் வேதனையையும், சோகத்தையும் திரையில் சித்தரிக்க வேண்டும் என்பதே இந்த படைப்பின் நோக்கமாகும். கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல சேனலில் எனது இத்திரைப்படம் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒளிபரப்பாவதால், எண்ணற்ற திரைப்பட இரசிகர்கள் இதனை கண்டு இரசிப்பதற்கான மிகச்சிறப்பான வாய்ப்பு அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மர்மங்களும், அதிரடி திருப்பங்களும் நிறைந்த இத்திரைப்படம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வார இறுதி நாளை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் என்பது நிச்சயம்,” என்று கூறினார்.

கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்!

இத்திரைப்பட கதாநாயகி நடிகை ஷீலா ராஜ்குமார் பேசுகையில், “கருவுற்ற ஒரு தாயின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவால்மிக்கதாகவே இருந்தது. அதுவும் அளவற்ற அன்புடன் நேசித்த பச்சிளங்குழந்தையை அப்போது தான் இழந்திருக்கும் ஒரு இளம் தாயாக இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. மர்மத்தை அவிழ்க்க முற்படும் ஒரு புலனாய்வு திரைப்படமான இதில் ஒரு அங்கமாக இடம்பெற்றிருந்தது. உண்மையிலேயே வித்தியாசமான, ஆர்வமூட்டுகிற அனுபவமாக இருந்தது. கலர்ஸ் தமிழ் சேனலில் நான் நடித்த இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியர் இடம்பெறுவது பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வாரஇறுதி நாளை உறுதிசெய்யும் என்று நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 16 ஞாயிறு அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மர்மம் நிறைந்த “ஜோதி” என்ற அதிரடி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை கண்டு இரசிக்க தயாராகுங்கள்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial