இந்த வார இறுதியில் முக்கோணக் கோட்பாட்டு விதியை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் திரைப்படமான ஜீவி 2 திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பவுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, வயகாம் 18-ன் தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, திரில்லர் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஜீவி 2 திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22, 2023 அன்று ஒளிபரப்ப உள்ளது. கதாநாயகன் சரவணனின் வாழ்க்கை முதல் பாகத்தின் முடிவில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்குகிறது. ஏனெனில் அவரது விதி, அவரது கடந்த கால வாழ்க்கை மோதல்களின் சுழலில் இழுக்கப்படுகிறது. நடிகர்கள் வெற்றி, மைம் கோபி, அஷ்வினி, கருணாகரன் மற்றும் ரோகினி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கிய மர்மம் கலந்த இத்திரைப்படத்தை காண வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22, 2023 மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.
ஜீவி முதல் பாகத்திலிருந்து அதே மனநிலையுடன் தொடங்கும் ஜீவி 2, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சில வலுவான மோதல்களுடன் முன்னும் பின்னுமாக இருக்கும் கர்மாக்களின் முக்கோணக் கருத்துடன் தொடர்புடைய அதன் கோட்பாடுகளுடன் கதாநாயகனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், சரவணன் தனது வீட்டு உரிமையாளரின் மகளை திருமணம் செய்த பிறகு தொடர்ச்சியான பல சவால்களை எதிர்கொள்கிறார். கதையானது சில எதிர்பாராத திருப்பங்களுடன் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்த சிக்கலான குழப்பத்திலிருந்து கதாநாயகன் எப்படி தன்னை மீட்டுக் கொள்கிறான் என்பது கதையின் மீதியாகும்.
இதைப் பற்றி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் பேசுகையில், “பூர்வ கர்மாவை மையமாக வைத்து, நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுடன் கடந்த கால தொடர்புடைய நிகழ்வுகளின் ஒத்திசைவான இந்த சிக்கலான சுவாரஸ்யமான கதையை கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஜீவி 2 திரில்லர் திரைப்படம் அனைவரையும் இறுதி வரை கவர்ந்திழுக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் மக்கள் இந்த தொடர்ச்சியை தொடர்ந்து ரசிப்பார்கள், ஏனெனில் இது தொடர்ந்து அவர்களை யூகிக்க வைக்கும்" என்றார்.
சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு விமான நிலைய அதிகாரி விளக்கம்
எண்ணற்ற சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஜிவி2 திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22,மதியம் 2:00 மணிக்கு கண்டு மகிழுங்கள்.
சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553).
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.