Home /News /entertainment /

கேன்சர் வந்துடுமோன்னு பயந்தேன்.. ஆப்ரேஷன் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

கேன்சர் வந்துடுமோன்னு பயந்தேன்.. ஆப்ரேஷன் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா தனக்கு நடந்த ஆப்ரேஷன் பற்றி ஷேர் செய்துள்ளார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடிக்கும் சின்னத்திரை நடிகை ஹேமா ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்ட வீடியோவை தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில்  பெண்களுக்கு முக்கியமான விழிப்புணர்வு பற்றியும் ஹேமா குறிப்பிட்டுள்ளார்.

    சின்னத்திரையில் மெகா ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது. இவரின் இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம். அதே போல் இவருக்கு தனியாக இணையத்தில் ஃபேன்ஸ் பேட்ஜூம் உண்டு. அந்த அளவுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் ஹேமா, கொரோனா லாக்டவுன் சமயத்தில் தனியாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினார்.

    பழனி வைத்த போட்டியில் தோற்று போன வருண்.. கதறி அழும் சத்யா!

    அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் ஹேமா இந்த யூடியூப் சேனலில் ’எனக்கு ஆப்ரேஷன்’ என்ற டைட்டிலில்  வீடியோ ஒன்று வெளியிட்டார். வீடியோவின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் பதறி போய் ஹேமாவுக்கு என்ன ஆனது? என வீடியோவை கிளிக் செய்தனர். அந்த வீடியோவில் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனது, டெஸ்ட் எடுத்தது, ஆப்ரேஷன் தியேட்டருக்கு சென்றது என பல விஷயங்களை ஹேமா ஷேர் செய்து இருந்தார்.

    கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!

    கடைசியில் தான் என்ன ஆப்ரேஷன் என்ற விஷயத்தை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதாவது, சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழான பகுதியில் 4 செ.மீ அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதை பற்றி டாக்டரிடம் செக் செய்த பின்னர், இது கேன்சர் கட்டியாக மாறி விடுமோ என் ஹேமா பயந்து நடுங்கி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஆஸ்பிட்டல் சென்று வந்த பின்பு அந்த கட்டியை நினைத்து தூக்கம் இல்லாமல் தவித்துள்ளார்.



    அதன் பின்பு மொத்த குடும்பத்துடனும் சேர்ந்து ஆலோசித்த பின்பு கட்டியை நீக்க முடிவு எடுத்துள்ளார். அதற்காக செய்யப்பட்ட ஆப்ரேஷன் தான் இது. இந்த ஆப்ரேஷனில் அவரின் தங்கை அவருடனே இருந்து ஹேமாவை  கவனித்து கொண்டார். இந்த ஆப்ரேஷன் பற்றி ரசிகர்களிடம் ஷேர் செய்த ஹேமா, பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சி யம் காட்ட வேண்டாம் என்றும் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி