Home /News /entertainment /

என்ன மீனா இப்படி பண்ணிடீங்க? அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

என்ன மீனா இப்படி பண்ணிடீங்க? அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மீனா கடைசி வரை வரவில்லை. இதனால் அனைவரின் முகமும் மாறி விடுகிறது

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிறந்த நாள் சர்ப்பிரைஸ் கொடுக்க இருந்த மொத்த குடும்பத்தையும் மீனா சோகத்தில் ஆழ்த்தி விட்டார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்.கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்து கலக்கி விட்டார். ஆனால் ஜீவா, மீனாவுக்கு விஷ் கூட செய்யாமல் தூங்கி விட்டார். இதனால் மீனா செம்ம கடுப்பில் இருக்கிறார். காலையில் கண்ணன் கொடுத்த சர்ப்பிரைஸ் பற்றி ஐஸ்வர்யா சொன்னதும், மீனாவுக்கு முகமே மாறி விட்டது. அதற்குள் ஜீவா, அவசர வேலைக்காக காலையில் கடைக்கு கிளம்பி விடுகிறார். இந்த நேரம் பார்த்து  மீனாவின்  அப்பா அம்மா ஃபோன் செய்கின்றனர்.

    இதையும் படிங்க.. மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

    மீனா, கோயிலுக்கு கூட போகவில்லை என்ற விஷயம் மீனா அப்பாவுக்கு தெரிந்ததும் உடனே மீனாவையும் கயல் பாப்பாவையும் அவருடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இன்றைய எபிசோடில் மதியம் வீட்டுக்கு வரும் ஜீவாவுக்கு மீனா இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது. அவருக்கும் முகம் மாறி விடுகிறது. நடந்த விஷயத்தை தனம் அண்ணி, ஜீவாவிடம் சொல்கிறார். உடனே மீனாவை சமாதானம் செய்ய , கண்ணன், முல்லை, தனம் ஆகியோர் மாலை மீனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு கேக் வெட்டலாம் என பிளான் செய்கின்றனர்.

    இதையும் படிங்க.. சந்திரலேகா சீரியலில் இனி நான் இல்லை… விலகிய முக்கிய பிரபலம்!

    கண்ணன், எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். 2 கேக் வாங்கி பலூன் கட்டி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்கிறார்கள். கடையில் இருந்து மூர்த்தி , கதிர், எல்லோரும் கிளம்பி வருகிறார்கள். கண்ணனும் ஐஸ்வர்யாவின் கண்ணை மூடி சர்பிரைஸ் கொடுக்கிறார். எல்லோரும் இவ்வளவு பாசமாக ஏற்பாடுகள் செய்து இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு அழுகை வந்து விடுகிறது. ஆனால் மீனா கடைசி வரை வரவில்லை. இதனால் அனைவரின் முகமும் மாறி விடுகிறது. மீனா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என்று தனம் அண்ணி புலம்புகிறார். மீனா வருவாரா இல்லையா? என்பது நாளைய எபிசோடில் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி