Home /News /entertainment /

ஜீவா செய்த காரியத்தால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

ஜீவா செய்த காரியத்தால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா, தான் குடிப்பதற்கு காரணமே மூர்த்தி அண்ணா தான் என வாதாடுகிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா குடித்து விட்டு வீட்டில் ரகளை செய்வதால், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் மிகப் பெரிய சண்டை வெடிக்கிறது.

    கூட்டு குடும்பத்தின் வாழ்வியலை சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடும்பத்தில் இருக்கும் ஆண் மது அருந்தினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்ற கோணத்தில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. மூர்த்தியின் தம்பிகளான ஜீவா, கதிர், கண்ணனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. அண்ணன் சொல்லே மந்திரம் என வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் ஜீவா மட்டும் இப்போது வேற ரூட்டில் சென்றுக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் மீனாவின் அப்பா ஜனார்த்தன். இவரின் சூப்பர் மார்க்கெட் கடையை பார்த்துக் கொள்ள ஜீவா சென்று இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் அவர் செய்ய வேண்டிய வேலைகளை ஐஸ்வர்யா பார்த்துக் கொள்கிறார்.

    விருது பெறாத காற்றுக்கென்ன வேலி சீரியல் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம்

    இது ஜீவாவுக்கு பிடிக்கவில்லை. மூர்த்தி, தன்னை ஒதுக்கி வைப்பதாக அவரே புரிந்து கொள்கிறார். ஆனால் உண்மையில் மூர்த்தி ஜீவாவை மீனாவின் அப்பா கடையில் இருக்க சொல்ல நிறைய காரணங்கள் இருக்கிறது. மீனாவின் அப்பா, மூர்த்தியிடம் இதுப் பற்றி பேசுகிறார். மாப்பிள்ளை ஜீவா இருப்பது பெரிய உதவி என்றும் சொல்கிறார். அதனால் தான் ஜீவாவை மூர்த்தி, சூப்பர் மார்க்கெட்டில் இருக்க சொல்கிறார். இந்த உண்மை தெரியாமல் ஜீவா, குடித்து வந்து மூர்த்தியிடம் சண்டை போடுகிறார்.

    இந்த அதிர்ச்சியை எப்படி தாங்க போகிறார் சஹானா? கலங்கி நிற்கும் சிவா!

    இன்றைய எபிசோடில், பொழுது விடிந்ததும், தனம் அண்ணி இதுப்பற்றி ஜீவாவிடம் கேட்கிறார். அதுமட்டுமில்லை இந்த குடி பழக்கம் வீட்டை நாசமாகிவிடும் எனவு அட்வைஸ் செய்கிறார். ஆனால் ஜீவா, இது பெரிய தப்பு இல்லை என கூற, மூர்த்திக்கு கோபம் வந்துவிடுகிறது. சண்டை  வெடிக்கிறது. எல்லோரும் ஜீவா குடித்தற்காக அவரை திட்டுகின்றனர். ஆனால் இது மீனாவுக்கு பிடிக்கவில்லை.

    மொத்த குடும்பமும் ஜீவாவின் நல்லதுக்கு தான் சொல்கிறார்கள் என தெரியாமல் குடும்பத்தின் மீது கோபம் கொள்கிறார். ஜீவா, தான் குடிப்பதற்கு காரணமே மூர்த்தி அண்ணா தான் என வாதாடுகிறார். அடுத்து என்ன நடக்கும்?  ஜீவா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்து விடுவாரா? போன்ற பல கேள்விகளுக்கு வரும் வார எபிசோடில் விடை கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி