Home /News /entertainment /

அந்த சீரியல் நடிகருடன் விஜய் சேதுபதி இவ்வளவு நெருக்கமா! வைரல் ஃபோட்டோ

அந்த சீரியல் நடிகருடன் விஜய் சேதுபதி இவ்வளவு நெருக்கமா! வைரல் ஃபோட்டோ

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஈஸ்வரிடம் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வருடன் நடிகர் விஜய் சேதுபதி பயங்கர நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை ஈஸ்வரே இந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

    ”ரசிகனை ரசிக்கும் தலைவா” என்று விஜய் சேதுபதியை ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். அதற்கு காரணம் அவர் எல்லோரிடமும் பழகும் விதம் தான். தன்னை தேடி வரும் ரசிகர்களை எவ்வளவு நேரம் ஆனாலும் சந்தித்து பேசிவிட்டு தான் செல்வார். இதுக் குறித்த பல வீடியோக்களை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதே போல் வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலும் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர். அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் என்கின்றனர் சினிமா வட்டார நண்பர்கள். இப்படி இருக்கையில் பலரும் இதுவரை பார்த்திடாத விஜய் சேதுபதியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

    சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதனை அனைவருக்கும் தெரியும். இவரின் முன்னாள் மனைவி சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ விவாகரத்தில் இவரின் பெயர் எல்லாம் சோஷியல் மீடியாவிலும் வைரலானது. பல காரசாரமான விவாதங்களும் நடந்தன. பர்சனல் லைஃபை தவிர்த்து சின்னத்திரை கெரியரில் தனக்கென தனி பெயரை சம்பாத்தித்து வைத்திருக்கிறார் ஈஸ்வர். சன் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாண பரிசி சீரியலில் இவரின் சூர்யா ரோல் பரவலாக பேசப்பட்டது.

    அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

    ஜெயஸ்ரீ உடனான பிரச்சனைக்கு பிறகு ஈஸ்வர் தற்சமயம் முழுக்க முழுக்க சினத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இன்று வெளியாகி இருக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு வாழ்த்துக்களை கூறி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.




    அதில் ஈஸ்வர் மேல் கைப்போட்டு கொண்டு, அவரின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்தப்படியே நடிகர் விஜய் சேதுபதி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஈஸ்வரிடம் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இணையத்திலும் இந்த ஃபோட்டோ தற்சமயம் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kaathu Vaakula Rendu Kadhal, Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி