எல்லாமே பொய்.. கந்துவட்டி புகார் குறித்து நடிகை ஜெயலட்சுமி விளக்கம்!

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 17.50 லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்தேன்

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 17.50 லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்தேன்

 • Share this:
  பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கந்துவட்டி புகார் அளித்துள்ள நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.

  சென்னை பாடி, தெற்கு மாட வீதியைச் சேர்ந்த கீதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "தாங்கள் நடத்தி வரும் செம்பருத்தி என்ற மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தார். பத்து பைசா என்ற வட்டியில் குழுவில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் கடனாகப் பணத்தைச் செலுத்தினார். அதற்காக எங்களிடமிருந்து வங்கிக் காசோலைகளை ஜாமீனாக பெற்றுக்கொண்டார். நாங்களும் மாதா மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த பணத்தை வட்டி என்று கூறுகிறார்.

  நடிகை ஜெயலட்சுமியும், வழக்கறிஞர் ஒருவரும் சேர்ந்து எங்களைக் கூண்டோடு அழித்துவிடுவோம் என்றும், எங்களிடமிருந்து பெற்ற காசோலைகள், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், பூர்த்தி செய்யப்படாத பச்சை காகிதத்தில் பெற்ற கையெழுத்துகளைக் கொண்டு எங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதாக மிரட்டுகிறார்கள். எனவே, இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள கீதா, கடந்த ஆண்டு பா.ஜ.க உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தங்கள் பகுதிக்கு வந்த நடிகை ஜெயலட்சுமி, வங்கி மூலம் குறைந்த வட்டியில் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி, எங்கள் குழுவில் உள்ள பெண்களை பா.ஜ.கவில் சேர்த்தார்.

  பின்னர், குறைந்த வட்டியில் பணம் கொடுத்த அவர், தொகையை செலுத்திய பின்பு, வட்டி மட்டுமே செலுத்தியிருப்பதாகவும், அசலைக் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார். அவர் மிரட்டிய ஆடியோவை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.தன் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடிகை ஜெயலட்சுமியும் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று, கீதா மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அவர், "சென்னை, பாடி, தெற்கு மாட வீதியைச் சேர்ந்த கீதா என்பவர், 2019- ல் எனக்கு அறிமுகமானார். 'கொரோனா பரவல் காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், எங்கள் குழுவில் உள்ளவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிள்ளைகளின் கல்லுாரி கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும்' என என்னிடம் கேட்டார். இதனையடுத்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 17.50 லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்தேன். ஆறு மாதத்திற்குள் கொடுத்தால் வட்டி ஏதும் இல்லை என்றும் கூறினேன். ஆனால், கீதா நான் பணம் கொடுத்த பெண்களிடம் இருந்து, 11 லட்சம் ரூபாயை வாங்கி, நுாதனமாக மோசடி செய்துவிட்டார். அந்த பணத்தை கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீதும், உடந்தையாக இருக்கும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: