Home /News /entertainment /

முக அழகுக்காக அப்படியொரு சிகிச்சையை எடுத்துக் கொண்ட ஜூலி!

முக அழகுக்காக அப்படியொரு சிகிச்சையை எடுத்துக் கொண்ட ஜூலி!

ஜூலி

ஜூலி

இப்போது ஜூலி எது செய்தாலும் பாசிடிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

    ஜல்லிக்கட்டு ஜூலியாக அறிமுகம் ஆகி இப்போது பிக் பாஸ் ஜூலியாக அறியப்படும் ஜூலி முக அழகுக்காக வித்தியாசமான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

    ஜூலி என்று அழைக்கப்படும் மரியா ஜூலியானா பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னை ஒரு வீர தமிழச்சியாக பிரதிபலித்ததன் மூலம் ஜூலிக்கு இந்த வாய்ப்பு தேடி வந்தது. கடைசியில் பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக ஜூலி மாறினார். ஏகப்பட்ட நெகடிவ் கமெண்ட்ஸ். ஆகையால் பிக் பாஸ் சீசன் 1 வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் கூட ஜூலிக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.



    சீரியலில் தான் அப்படி... நிஜத்தில் வேற மாதிரி! காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா கொடுத்த ஷாக்!

    ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார்.  இதன் விளைவாக அவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ஜூலிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2வது இன்னிங்ஸை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் மாடலிங், ஆங்கரிங் என கலக்க தொடங்கினார். அதன் பின்பு அவருக்கு பிக் பாஸ் அல்டிமேட்டில் வாய்ப்பு கிடைத்தது. செய்த தவறை சரிசெய்ய இது இன்னொரு வாய்ப்பு என நினைத்தவர் தைரியமாக களம் இறங்கினார்.

    வருண் - சக்திக்கு வில்லனாகும் தருண்? மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம்!

    சொல்லப்போனால் பிக் பாஸ் அல்டிமேட்  ஜூலியின் வாழ்க்கையை அப்படியே மாற்றியது இந்த சீசனில் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை ஜூலியை ரசிகர்கள் ஓட்டு போட்டு காப்பாற்றினர். பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியே வந்தவர் தற்போது யூடியூப் சேனலில் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Julie (@mariajuliana_official)






    முன்பு மாதிரி இல்லை இப்போது ஜூலி எது செய்தாலும் பாசிடிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்நிலையில் முக அழகுக்காக ஜூலி ஸ்கின் கிளினிக் சென்று VAMPIRE FACIAL எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அந்த ட்ரீட்மெண்டுக்கு பிறகு அவரின் முகம் தங்கம் போல் ஜொலிக்கிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஸ்கின் ட்ரீட்மெண்ட் இப்போது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஜூலியும் அதை செய்து கொண்டு முன்பை விட ரொம்ப அழகாக மாறி உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil, Jallikattu julie, Television, Vijay tv

    அடுத்த செய்தி