• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படத்தில் நடித்ததால் கேள்விக்குறியாகியிருக்கும் ’ஜெய் பீம்’ அல்லியின் கல்வி

படத்தில் நடித்ததால் கேள்விக்குறியாகியிருக்கும் ’ஜெய் பீம்’ அல்லியின் கல்வி

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஜெய் பீம் படத்தில் ராஜாகண்ணு - செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தை, க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களின் மனங்களை வென்றது.

  • Share this:
    சினிமாவில் நடித்ததற்காக, ஜெய் பீம் குழந்தை நட்சத்திரத்தின் டி.சி-யை வாங்கிக் கொள்ள பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

    படத்தில் ராஜாகண்ணு - செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தை, க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களின் மனங்களை வென்றது. இந்நிலையில் படத்தில் நடித்ததற்காக அந்தக் குழந்தையின் டிசி-யை வாங்கக் சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.



    நானும் ரவுடி தான் படத்தில் நடித்த ரியாஸ் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: