Home /News /entertainment /

மிர்ச்சி செந்தில் டெடிகேஷன் வேற லெவல்! - நெகிழும் கதாசிரியர்!

மிர்ச்சி செந்தில் டெடிகேஷன் வேற லெவல்! - நெகிழும் கதாசிரியர்!

இளையராஜா - மிர்ச்சி செந்தில்

இளையராஜா - மிர்ச்சி செந்தில்

மிர்ச்சி செந்தில் இந்த கதைகள அழகா மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறாரு. நாங்க கதை சொல்ற விதம் எஸ்.ஜே.சூர்யா சார் பட பாணியில் இருக்கும். ஆரம்பத்திலேயே கதையோட ஒன்லைன் சொல்லிட்டு அதன் பிறகு காட்சிகள் விரியும்.   

கிரைம் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். திரைப்படங்களில் கூட கிரைம், திரில்லர் கான்செப்ட் இருப்பதையே மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். டாக்டர், ஜெய் பீம், புஷ்பா போன்ற சமீபத்திய படங்கள் இதற்கு சிறந்த உதாரணம். பொதுவாக நியூஸ் சேனல்களில் இரவு 10 மணிக்கு மேல் கிரைம் தொடர்கள் தான் ஒளிபரப்பப்படுகின்றன.

நிஜத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அவை படமாக்கப்படுகின்றன.   விஜய் டிவி, ஜீ தமிழ், போன்ற முக்கிய பொழுதுபோக்கு தமிழ் சேனல்கள் கிரைம் டாக்குமெண்ட்ரி எடுக்கும் முயற்சியை இதுவரை மேற்கொள்ளாதது வருத்தத்திற்குரிய விஷயம். கலர்ஸ் தமிழ் சேனல் அந்த குறையை தீர்க்கும் விதமாக ”ஜகமே தந்திரம் கதைகள்’’ என்னும் புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த கிரைம் டாக்கு டிராமாவை மிர்ச்சி செந்தில் தொகுத்து வழங்கி வருகிறார்.

ராஜரத்தினம் தயாரிப்பில், ஆனந்த் இயக்கத்தில் இதுவரை 7 எபிசோடுகள் ஒளிப்பரப்பட்டுள்ளது. ஏற்கனவே கலர்ஸ் ஹிந்தி சேனலில் ஒளிபரப்பாகி வந்த கோட் ரெட் (Code Red) என்னும் நிகழ்ச்சியின் தமிழாக்கம் தான் ஜகமே தந்திரம் கதைகள்.

Also read.. பிக் பாஸ் வீட்டில் சரத்குமார்... பணத்துடன் வெளியேறப்போவது யார்?

டப்பிங் செய்யப்பட்ட தொடர் என்றாலும், அந்த ஃபீல் வராமல் தமிழ் வார்த்தைகளை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் ஸ்கிரிப்ட் ரைட்டர் இளையராஜா. இந்த புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ரெஸ்பான்ஸ் குறித்து இளையராஜாவிடம் கேட்டோம்.. 

Script writer Illayaraja
Script writer Illayaraja


டப்பிங் சீரியல்கள் தமிழாக்கம், ஜகமே தந்திரம் கதைகள் ரீச் என பல்வேறு விஷயங்கள் குறித்து  இளையராஜா நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பின்வருமாறு..

”நான் சீரியல்கள், கிரைம் தொடர்களுக்கு கடந்த 8 வருஷங்களா ஸ்கிரிப்ட் ரைட்டிங் பண்ணிட்டு இருக்கேன். எங்கள ஸ்கிரீன் ரைட்டர்ஸ்னு குறிப்பிடுவாங்க. கடைசியா கலைஞர் டிவியில் “கண்ணாடி’’ அப்படிங்குற கிரைம் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அது முடிஞ்சதும் கலர்ஸ் தமிழின் ”ஜகமே தந்திரம் கதைகள்’’ நிகழ்ச்சி வாய்ப்பு வந்துச்சு.  கோட் ரெட் எனும் ஹிந்தி நிகழ்ச்சிய தமிழாக்கம் செய்றோம். ஹிந்தியில் `கோட் ரெட்’ நிகழ்ச்சி 260 எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி ஹிட் ஆகியிருக்கு. அதுல முதல் 30 எபிசோடுகள் மட்டும் தமிழாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கு. 

Mirchi senthil and Illayaraja
Mirchi senthil and Illayaraja


 எதிர்பார்க்கும் ரேட்டிங் வரும்பட்சத்தில் தமிழ்நாடு சார்ந்த கதை களத்தில், நேரடியாக தமிழ்லயே இந்த நிகழ்ச்சிய படமாக்க பிளான் பண்ணியிருக்காங்க.  இப்பவும் இந்த நிகழ்ச்சிய பார்க்கும் போது பெருசா ஹிந்தி ஃபீல் வராது. காரணம் நாங்க தமிழ் ஃபிளேவர் கொண்டு வர நிறைய விஷயம் எடிட்டிங்கில் பண்ணியிருக்கோம். டயலாக் மட்டும் தமிழ் படுத்தாம, காட்சிகள்-ல வர பெயர் பலகை, நியூஸ் பேப்பர் கட்டிங் உட்பட அனைத்தையும் எடிட்டிங்கில் மாத்தியிருக்கோம்.

Also Read.. குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் இருக்காரா இல்லையா?

மிர்ச்சி செந்தில் இந்த கதைகள அழகா மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறாரு. ரொமான்ஸ் திரில்லர், கொலை, கொள்ளை, பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள்ன்னு பல ஜர்னர்கள் பத்தி இந்த தொடர் பேசும்.  நாங்க கதை சொல்ற விதம் எஸ்.ஜே.சூர்யா சார் பட பாணியில் இருக்கும். ஆரம்பத்திலேயே கதையோட ஒன்லைன் சொல்லிட்டு அதன் பிறகு காட்சிகள் விரியும்.   

Shoot
Shoot


மிர்ச்சி செந்தில் என் சீனியர். எனக்கு பரிட்சையமானவர். இந்த புராஜக்ட்ல அவரோட வேலை செய்யுறது ரொம்ப புடிச்சிருக்கு. அவருக்குமே இந்த தொடர் புது அனுபவம்தான். முதல் நாள் ஷூட் நடந்தப்போ செந்தில் என் ஸ்கிரிப்ட் பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குறதா பாராட்டினார். ஸ்கிரிப்ட்ல இருக்குறத சரியா டெலிவர் பண்ணனும்னு ரொம்ப கவனமா இருப்பார். நான் எழுதியிருக்குறத 100% அப்படியே பேசுவார். அவர் நெனச்சா அவருக்கு ஏத்த மாதிரி மாத்தி பேசிக்கலாம். ஆனா அவர் அப்படி செய்ய மாட்டார். 

Mirchi senthil
Mirchi senthil


தமிழ்ல புனைவு அல்லாத நிஜ சம்பவங்களின் அடிப்படையில்  புலனாய்வு, கோப்பியம், நம்பினால் நம்புங்கள், வழக்கு, கண்ணாடி மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் வந்துருக்கு. ஆனா ”ஜகமே தந்திரம் கதைகள்’’ முழுக்க முழுக்க ஃபிக்‌ஷன். புனைவு கதைகள் அடிப்படையில் படமாக்கப்பட்டிருக்கு.  இது தமிழ் சின்னத்திரையில் புது முயற்சி. கொஞ்சம் கடினமானதும் கூட. அதனால தான் ஹிந்தி கதைகள டப்பிங் செய்திருக்கோம். 

script writer Illayaraja
Script writer Illayaraja


சீரியல்கள்ல மாமியார் மருமகள் சண்டை,  தொழில் போட்டி மாதிரியான ஒன்லைன்கள் புடிச்சு ஸ்கிர்ப்ட் எழுதலாம். ஆனா  நம்ம தொடர் பொறுத்தவரைக்கும் வாரத்தில் ஆறு நாள், ஆறு கதைகள் வேணும்.  அதை  ஷூட் பண்ண 4,5 யூனிட் வேணும். அதனால தான் இப்போதைக்கு நேரடி தமிழ் கிரைம் டிராமாவா எடுக்க முடியல. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. `கண்டிப்பா தமிழ்நாட்டு கதைகளையும் `ஜகமே தந்திரம் கதைகள்' பேசும்ன்னு நம்புறேன்’’ என்றார் நம்பிக்கையுடன். உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

அடுத்த செய்தி