விஜய் டிவி பிரபலம் மரணம் - பேட்டிக்கு அழைக்க வேண்டாம் என ஜாக்குலின் வேண்டுகோள்!

ஜாக்குலின்

விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மறைவையடுத்து இரங்கல் தெரிவித்துள்ள ஜாக்குலின், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் சுழன்று அடித்து வருகிறது. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் மற்றும் சீரியல் நடிகர்கள் என அடுத்தடுத்து மரணமடைந்து வருகின்றனர். விஜய் டிவியிர் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா அண்மையில் மரணமடைந்த நிலையில், மற்றொரு சீரியல் நடிகரும் உயிரிழந்துள்ளார். தேன்மொழி பி.ஏ தொடரில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பால் காலமானார்.

அவரின் மறைவு செய்தி தேன்மொழி பி.ஏ சீரியல் குழுவினர் மட்டுமல்லாது விஜய் டிவி குடும்பம் மற்றும் சின்னத்திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனக்கு அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள ஜாக்குலின், மிகவும் சோகமாக இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அப்பா குட்டி ரமேஷ் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். "நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள், தற்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன், எனக்கும் அப்பாகளுக்கும் ராசி இல்லை" என சோகமாக ஜாக்குலின் கூறியுள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Jacquline Lydia (@me_jackline)

மேலும், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் எனவும் மீடியாக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

AlsoRead: கொரோனாவால் மனைவி உயிரிழப்பு - மருத்துவமனையில் அருண்ராஜா காமராஜ்

குட்டி ரமேஷின் மற்றொரு பொண்ணாக நடித்து வந்த அரிஷிதா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "உங்களை எப்போதும் நான் மிஸ் செய்வேன் அப்பா" எனக்கூறி அவருடன் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 சின்னத்திரையில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் கம்பம் மீனாவும் நடிகர் குட்டி ரமேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மறைவெய்தியது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவார் என எண்ணியிருந்த நிலையில், அவர் காலம் சென்றது வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில், " அய்யோ கடவுளே என்ன கொடுமை இது ரமேஷ் ஸார். எப்பவுமே சுறுசுறுப்பா கலகலனு இருப்பிங்களே ..நீங்க சரியாகி வந்துருவிங்கனு முழு நம்பிக்கையோட இருந்தோமே .. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம், ஃபேஸ்புக்ல போடுங்க, இன்ஸ்டால போடுங்கனு சொல்லுவிங்களே ரமேஷ் ஸார். எத்தனை லைக் வந்துருக்கு, என்னென்ன கமெண்ட் வந்திருக்குனு கேப்பிங்களே ரமேஷ் ஸார்.. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஸார்" என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

 தேன்மொழி பி.ஏ தொடரில் நடிக்கும் வருண் உதய் வெளியிட்டுள்ள பதிவில், " தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு, குட்டி ரமேஷ் சார் மிகச்சிறந்த மனிதர். அவருடைய இறப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒட்டுமொத்த தேன்மொழி பி.ஏ குழுவும் உங்களை இழந்து வாடும். ஆழ்ந்த இரங்கல்" எனக் கூறியுள்ளார். ராம்கி மற்றும் மோகன் உள்ளிட்டோரின் திரைப்படங்களிலும் குட்டி ரமேஷ் நடித்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: