• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இசையை அடையாளமாக மாற்றி கொண்ட மருத்துவர்.. பிக் பாஸில் ஒலிக்காமல் போன ஐக்கி பெர்ரியின் குரல்!

இசையை அடையாளமாக மாற்றி கொண்ட மருத்துவர்.. பிக் பாஸில் ஒலிக்காமல் போன ஐக்கி பெர்ரியின் குரல்!

பிக் பாஸ் 5 ஐக்கி பெர்ரி

பிக் பாஸ் 5 ஐக்கி பெர்ரி

நீலகிரியில் இருக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தரும் வேலையை சேவையாக செய்து இருக்கிறார்.

  • Share this:
    மன வலியை போக்கும் இசையை அடையாளமாக மாற்றிக் கொண்ட மருத்துவர் ஐக்கி பெர்ரி பற்றி தெரியாத தகவல்கள்.

    பிக் பாஸ் 5 சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் டாக்டர் ஐக்கி பெர்ரி. மருத்துவம் முடித்த ஐக்கி, இசையை அடையாளமாக மாற்றி கொண்டவர். தஞ்சாவூரைச் சேர்ந்த ஐக்கி, படித்தது வளர்ந்தது எல்லாமே பாண்டிச்சேரியில் தான். ஜெர்மனியிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். சொற்களை மூச்சுவிடாமல் அடுக்கிப் பாடும் ராப் பாடலை தமிழ் பாடில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். ஐக்கிக்கு மற்றொரு பெருமையும் உண்டு. ராப் பாடல்களைத் தமிழில் பாடிய முதல் பெண்ணும் இவர் தான். இவரின் திறமைக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    இவர் குரலில் வெளிவந்த ‘பிரைட் ஆஃப் லவ்’ ஆல்பம் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையப்படுத்தியும் இவர் பாடிய ராப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் இவர் குரல் ஒலித்துள்ளது.‘விநோதன்’ படத்தில் ஐக்கி பெர்ரி ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழில் கவிதை எழுவதும் இவருக்கு கைவந்த கலை. இவரே பாடல் எழுதி அதை பாடுவார்.

    இவரின் நிஜப் பெயர், ஐக்கியா. அதைச் சுருக்கி எல்லோரும் இவரை ஐக்யா என்று அழைக்க, இவரது மருத்துவமனையின் பெயர் பெர்ரி க்ளோ. அதனால் இரண்டையும் சேர்த்து ஐக்கி பெர்ரி என்று பெயர் சூட்டிக்கொண்டார்.ராப்பில் கவனம் செலுத்தினால் மருத்துவ சேவையில் இவரின் நாட்டம் குறையவில்லை. மக்கள் சேவையில் அதிகளவில் ஆர்வம் கொண்டவர், விரும்பிய மருத்துவம் படித்தார். நீலகிரியில் இருக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தரும் வேலையை சேவையாக செய்து இருக்கிறார்.



    இவரின் ரோல் மாடல் அமெரிக்க பாப் பாடகி கேத்தி பெர்ரி. அவரை ரோல் மாடலாக கொண்டு தனது பெயரையும் இப்படி மாற்றிக் கொண்டார்.இப்படி பல திறமைகளுக்கு சொந்தமான ஐக்கி, பிக் பாஸ் வீட்டில் இன்னும் ஜொலிக்காமல் இருப்பது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுமட்டுமில்லை இந்த வார நாமினேஷனில் இவர் தற்போது குறைவான ஓட்டுக்கள் பெற்றுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: