முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக் பாஸில் அண்ணாச்சி சொன்ன வார்த்தையை வெளியே வந்ததும் செய்த ஐக்கி பெர்ரி.. புகழும் ரசிகர்கள் கூட்டம்!

பிக் பாஸில் அண்ணாச்சி சொன்ன வார்த்தையை வெளியே வந்ததும் செய்த ஐக்கி பெர்ரி.. புகழும் ரசிகர்கள் கூட்டம்!

பிக் பாஸ்  ஐக்கி பெர்ரி

பிக் பாஸ் ஐக்கி பெர்ரி

ஐக்கி பெர்ரி, பிக்பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளரான இமான் அண்ணாச்சியின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உள்ளார்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி-யில் பல ரியாலிட்டி ஷோக்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வந்தாலும் பிரபல சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஷோவாக இருந்து வருகிறது.

தற்போது விஜய் டிவி-யில் இந்த ரியாலிட்டி ஷோவின் 5-ஆம் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 3 முதல் துவங்கி நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5, இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் துவங்கியது.

பழைய சீசன்களை போலில்லாமல் முதலில் மந்தமாக சென்று கொண்டிருந்த இந்த சீசன் பின் ஒருகட்டத்தில் களை கட்டியது. பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய நமிதா மாரிமுத்துவை தொடர்ந்து முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான நாடியா சாங். தொடர்ந்து பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே பிரபல டான்ஸ் கோரியோகிராஃபர் அமீர் மற்றும் பிரபல சீரியல் நடிகரும் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸில் என்ட்ரி ஆனார்கள். இவர்களோடு யுடியூபர் அபிஷேக் ராஜாவும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடயே ஜக்கி பெர்ரி பிக்பாஸ் போட்டியிலிருந்து போன வாரம் வெளியேற்றப்பட்டார். லேட்டஸ்ட் வாரத்தில் பிக்பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த அபிஷேக் மீண்டும் வெளியேற்றப்பட்டார். அபிஷேக்கின் வெளியேறியதை தொடர்ந்து இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அபிநய், அமீர் மாஸ்டர், அக்ஷரா, சிபி சந்திரன், இமான் அண்ணாச்சி, நிரூப் நந்தகுமார், பாவனி ரெட்டி, விஜே பிரியங்கா, ராஜு ஜெயமோகன், சஞ்சீவ் வெங்கட், தாமரை, வருண் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

' isDesktop="true" id="633353" youtubeid="VaOvf5J8c4U" category="television">

இதனிடையே அபிஷேக்கிற்கு முன்னர் பிக்பாஸை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி, பிக்பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளரான இமான் அண்ணாச்சியின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உள்ளார். வேற்றுமையை மறந்து தங்கள் வீட்டிற்கு வந்த ஐக்கி பெர்ரியை இமான் அண்ணாச்சி குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாசலில் நின்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்று விருந்தோம்பல் செய்தனர். இதனால் ஐக்கி பெர்ரி மிகவும் மகிழ்ந்து போனார். இமான் அண்ணாச்சி குடும்பத்தை ஐக்கி பெர்ரி சந்தித்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv