Home /News /entertainment /

சிம்பு படத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்? தீயாய் பரவும் புகைப்படம்!

சிம்பு படத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்? தீயாய் பரவும் புகைப்படம்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

சிம்புபட ஷூட்டிங் ஸ்பாட்டில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிரபலம் கலந்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான STR நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இந்த படம் பல போராட்டங்களுக்கு பிறகு திரையிடப்பட்டு தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படும் சிம்புவை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

    தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.   ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதத்தில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிரபலம் கலந்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய வருண் தான் அது.

    இதையும் படிங்க.. ஒரு நைட்டிக்கு இவ்வளவு டிராமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் அலப்பறைகள்!

    இந்த படத்தில் இவர் இணைந்துள்ளாரா என்ற தகவல் தெரியவில்லை. வருண், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 7 போட்டியாளர்களுடன் 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    முன்னதாக, இதுவரை எந்த சீசனிலும் இல்லாதவாறு, முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடந்தது. அதே போல, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வருண் மற்றும் அக்ஷரா இருவருமே ஒன்றாக வெளியேறினர். இவர்கள் வெளியேறிய பிறகு ரசிகர்களின் ஆதரவு மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் போது, வருண் மற்றும் அக்ஷரா இருவருமே நல்ல நண்பர்களாக நல்ல புரிதலுடன் இருந்து வந்துள்ளனர். அதே நேரத்தில் இருவருக்குமே தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் உள்ளது.

    இதையும் படிங்க.. விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

    கடுமையான டாஸ்க்குகளை எளிதாக எதிர்கொண்ட அக்ஷரா ரெட்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதே போல, பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும், எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல், இயல்பாக வருண் நடந்து கொண்டது பலரையும் கவர்ந்தது. மேலும் வருண், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்று தான், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடித்த ஜோஷ்வா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

    ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் வருண்


    அதுமட்டுமல்லாமல், வருண் அக்ஷரா இருவருமே ஜோடியாக நடிப்பதற்காக ஒரு புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்புவுடன் வருண் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Simbu, Vijay tv

    அடுத்த செய்தி