Home /News /entertainment /

அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

இசைவாணி

இசைவாணி

இசைவாணி முறிந்து போன தனது திருமண வாழ்க்கை பற்றி இதற்கு முன்பு எந்த இடத்திலும் பேசவில்லை.

    முன்னாள் கணவர், திருமணம், விவாகரத்து சர்ச்சைகளுக்கு முதல் முறையாக பதில் அளித்துள்ளார் கானா பாடகி இசைவாணி.

    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். இவர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இவர் கானா துறையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சிறு வயதில் இருந்தே கானா பாடல் பாடி வரும் இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமான முகமாக மாறுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. வட சென்னையைச் சேர்ந்த இவர் பெஸ்ட் கேர்ள் என பிபிசி பட்டியலில் தேர்வாகியுள்ளார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி , இசைவாணிக்கு  பாசிடிவ் ப்ளஸ் நெகட்டிவ் என சரி சமமான ரீச்சை வாங்கி தந்தது. தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாடகர் வேல் முருகன் ஜோடியாக இசைவாணி நடனம் ஆடி வருகிறார்.

    கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

    பிக் பாஸ் வீட்டில் இசைவாணி இருந்த போது, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் தன்னுடைய வாழ்க்கை பயணம் என இசைவாணி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பலரையும் கலங்க வைத்தது. ஹார்மோனிய கலைஞரான அவரின் தந்தை மூலம் தான் இசைவாணிக்கு கானா பாடல் மீது ஆர்வம் வந்ததாம். சொந்த வீடு இல்லை, வட சென்னை குடும்பம் என பல கதைகளை பகிர்ந்து கொண்ட இசைவாணி முறிந்து போன தனது திருமண வாழ்க்கை பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. இது  இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

    பாவ்னி, அபிஷேக் போன்றவர்கள் தங்களது திருமண வாழ்க்கை பற்றி பேசும் போது இசைவாணி மறைக்க என்ன காரணம்? எனவும் ரசிகர்கள்  கேட்டு இருந்தனர். இசைவாணிக்கும்  சதீஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் முதன்முறைய இந்த சர்ச்சைக்கு இசைவாணி பதில் அளித்துள்ளார்.

    இத்தனை லட்சமா? சூப்பர் சிங்கர் பிரபலம் வாங்கிய புதிய கார்!

    பேட்டி ஒன்றில் இதுக் குறித்து பதில் கூறிய இசைவாணி ”கல்யாணம் ஆன பிறகு கானா பாடுவதற்கு சப்போர்ட் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் கணவர் சப்போர்ட் செய்தார், அதன் பின்பு அவரின் குடும்பம் விடாபிடியாக வேண்டாம் என்றனர். அதன் பின்பு அவரும் வேண்டாம் என்றார். எனக்கு கானா தான் முக்கியம் என்று தோன்றியது. அதனால் திருமண வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி விட்டேன். அவருக்கு இப்ப வேற கல்யாணம் ஆயிடுச்சு நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Television, Vijay tv

    அடுத்த செய்தி