• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டார்கெட் செய்யப்படும் இசைவாணி... ராஜு மற்றும் அண்ணாச்சியுடன் அவருக்கு என்ன தான் பிரச்சனை?

டார்கெட் செய்யப்படும் இசைவாணி... ராஜு மற்றும் அண்ணாச்சியுடன் அவருக்கு என்ன தான் பிரச்சனை?

பிக் பாஸ் இசைவாணி

பிக் பாஸ் இசைவாணி

இமான் அண்ணாச்சியுடன் இசைவாணிக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

  • Share this:
    பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களால் இசைவாணி டார்கெட் செய்யப்படுகிறார். இதுக்குறித்த புரமோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 5, கடந்த அக்டோபர் 3 அன்று பிரமாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் முதல் நாளே ஈர்த்தது. இதற்கான முக்கிய காரணம், தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராக பங்கேற்றதே ஆகும்.நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் வலி நிறைந்த கடந்த காலத்தை நமீதா மாரிமுத்து பகிர்ந்த போது, கண்கள் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. திருநங்கையாக நமீதா எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் நம்முடைய கற்பனைக்குக் கூட அப்பாற்பட்டவை..நமீதா போட்டியாளராக அறிமுகமான போது, ரசிகர்கள் கவனத்தை மட்டுமே ஈர்த்தார். ஆனால், நமீதாவின் கடந்த கால போராட்டங்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதைத் தொட்டது. பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மிகவும் சவாலான போட்டியாளராக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறினார்

    இந்நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தது. அதுமட்டுமில்லை போட்டியாளர்களுடன் பிரிவினையும் எழுந்தது. அதில் முக்கியமாக இசைவாணி போட்டியாளர்களால் கொஞ்சம் தனிமைப்படுத்தப்படுவது போல் காட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் இசைவாணி, 8 ஓட்டுகள் வாங்கி எலெக்‌ஷன் புரஸாஸூக்கு செலக்ட் ஆனார்.இந்நிலையில் இமான் அண்ணாச்சியுடன் இசைவாணிக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு ஆதரவு என்று பார்த்தால் பாவனி மற்றும் ஸ்ருதி மட்டுமே

    பிக் பாஸ் ராஜூ மீது பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. விசாரணை கமிஷன் எப்ப பாஸூ?

    இந்நிலையில் இன்றைய 2 வது புரமோவில் இசைவாணியை காணாமல் போன போட்டியாளர்கள் லிஸ்டில் இமான் அண்ணாச்சி மற்றும் ராஜூ பாயும் சேர்க்கின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கூட்டத்தில் காணாமல் போனவர்கள் என தங்களுக்கு தோன்றியவர்களின் பெயர்களை கூறுகின்றனர். அதில் மதுமிதா, அபிநய், ஸ்ருதி, நடியா சங், இசை மற்றும் அக்‌ஷரா உள்ளிட்ட போட்டியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.



    நாடக டாஸ்கில் அம்மன் அவதாரம் எடுக்கும் இசை, இமான் அண்ணாச்சி மற்றும் ராஜூவால் டார்கெட் செய்யப்படுகிறார். கூட்டத்தில் காணாமல் போனவர் என்றால் அது நான் தான் என தனது பெயரையே சொல்கிறார் நாடியா. பிரியங்கா இம்முறையும் சிரித்துக் கொண்டே அக்‌ஷரா முன்பாகவே அக்‌ஷரா கூட்டத்தில் காணாமல் போய்விட்டார் என சொல்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: