• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி-யில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி - சூப்பர் சிங்கருக்கு போட்டியா?

சன் டிவி-யில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி - சூப்பர் சிங்கருக்கு போட்டியா?

ராஜபார்வை நிகழ்ச்சி

ராஜபார்வை நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜா கலந்துக் கொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு ராஜபார்வை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  • Share this:
    சின்னத்திரையில் இசைஞானி இளையராஜா தோன்றும் நிகழ்ச்சி ஒன்றின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், விஜய் டிவி-யில் ஒளிபரபாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் டைட்டில் வின்னருக்கு இணையான பேரையும் புகழையும் பெறுவார்கள். கடந்த பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்கள் நடுவர்களாக கலந்துக் கொள்வார்கள்.

    தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பவிருக்கிறது. இசைஞானி இளையராஜா கலந்துக் கொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு ராஜபார்வை எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இதன் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் தயாரித்து வருகிறது.



    இளையராஜா திரையில் தோன்றினாலே ரசிகர்களுக்கு அது எண்ணிலடங்கா நினைவுகளை தரும். அந்த வகையில் அவர் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்றதும், மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: