வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில், தொலைக்காட்சி சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாத வகையில் ஒவ்வொரு சேனல்களும் ஏகப்பட்ட சீரியலைகளை ஒளிபரப்பி ஹிட்டாகி வருகின்றன.
அதிலும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தொடங்கிய கயல் மற்றும் சுந்தரி சீரியல் ஆரம்பமானத்தில் இருந்தே ஹிட் தான். அதற்கு இரு சீரியல்களின் கதைக்களம் தான் காரணம். வாராவாரம் வெளியாகும் டிஆர்பி-யில் இரு சீரியல்களும் போட்டிபோட்டுக்கொண்டு முதலிடம் பிடித்து வருகின்றன.
அதிலும், இரவு 7 மணிக்கு ஒளிபரப்பட்டு வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதிலும், இந்த கதாபாத்திரத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் சுந்தரி நிறத்தில் கருமை அழகை கொண்டவர். அதுவே இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க காரணமாகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’. இவர் டிக்டாக் மூலம் ஏற்கனவே பிரபலமானவர். மேலும் விஜய் டிவி-யில் கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதுதவிர எண்ணற்ற ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார். அப்போதே இவரது நடிப்பு திறமை பலரிடம் பாராட்டை பெற்றது.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் “ஐரா” திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தற்போது அவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எப்போதும் தனது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கேபி பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் இவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களை எண்ணற்ற ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
Beast First Single: வெளியானது விஜய்யின் பீஸ்ட் அட்டகாச அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு இசை ஜாம்பவானும் இவரது இன்ஸ்டா பேஜை ஃபாலோ செய்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 6.1 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கையோ வெறும் 64 தான். அதில், ஒருவராக இருப்பவர் தான் நடிகை கேபி. இதனை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாக கேபி மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பித்த வேகத்திலேயே பிரபல சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி... காரணம் இது தான்!
ஏற்கனவே, சுந்தரி
சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா கடந்த ஆண்டு மே மாதத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியது. ‘மூப்பில்லா தமிழே தாயே'(Moopilla Thamizhe Thaaye) என்ற பாடலுக்காக தன்னுடன் கேப்ரியல்லா பணியாற்றியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.