• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோஜா சீரியல் ஹீரோயினுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

ரோஜா சீரியல் ஹீரோயினுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

பிரியங்கா நல்காரி

பிரியங்கா நல்காரி

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் அர்ஜூன்-ரோஜா கதாபாத்திரங்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

  • Share this:
    தொலைக்காட்சி சீரியல்களில் எப்போதும் முதலிடத்தை பிடித்திருக்கும் சீரியல் என்றால் அது சன் டிவி-யின் ரோஜா சீரியல் தான். ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிரியங்கா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். நடனமாடுவதில் சிறந்து விளங்கும் இவர் ஏராளமான டான்ஸ் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

    பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்தார்.

    பின்னர் அவருக்கு தெலுங்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தன. மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார். நடிப்பில் சிறந்து விளங்கும் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. தமிழில் இவரது முதல் படம் தீயா வேலை செய்யனும் குமாரு. அந்த படத்தில் ஹன்சிகாவின் தோழியாக திவ்யஸ்ரீ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆகமொத்தம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    பிறகு லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி முத்திரையை பதிக்க முடியவில்லை. இந்த நிலையில் இவருக்கு தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் தான் தற்போது செம ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல். அர்ஜூன்-ரோஜா கதாபாத்திரங்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் திரையுலகில் பிரியங்காவிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே சீரியல் ரோஜா தான்.

    அதேபோல, இவர் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. எங்கு சென்றாலும் அங்கு ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து பதிவிடுவது வழக்கம். மேலும் குட்டி குட்டி ரீல்ஸ் வீடியோக்களையும் இவர் பதிவிடுவார். அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீலிஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.




    அதில், அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று அந்த ரீலிஸ் வீடியோ கணித்தது. அவரும் ஆவலுடன் பதிலுக்காக காத்திருக்கிறார். இறுதியில் உங்களுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்று அந்த கணிப்பு பதிலளித்தது. இதனை பார்த்தவுடன் பிரியங்கா ஷாக் ஆகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் 'இன்ஸ்டாகிராம் கூட ரோஜா சீரியல் பார்க்கிறது போல' என கலாய்த்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: