• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cook With Comali: குக் வித் கோமாளி பாலாவுடன் ரித்திகாவுக்கு காதலா?

Cook With Comali: குக் வித் கோமாளி பாலாவுடன் ரித்திகாவுக்கு காதலா?

ரித்திகா - பாலா

ரித்திகா - பாலா

வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

  • Share this:
    பாலாவுடன் காதலா, குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்துக் கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நடிகை தமிழ் ரித்திகா.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் 2-வது சீசனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

    இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் ரித்திகா. அப்போது நீங்களும் பாலாவும் காதலிக்கிறீர்களா? என நிறையப் பேர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ரித்திகா, “எதை வச்சு நீங்க இப்படி கேக்குறீங்கன்னு தெரில. திரையில் வரும் ஒவ்வொரு விஷயமும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகத் தான். ஒவ்வொரு நடிகருக்கும் இதுவே நோக்கம். வேறு எந்த நோக்கமும் இல்லை, நீங்கள் அதை ரசிக்கணும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. பாலா எனக்கு நல்ல நண்பர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

    குக் வித் கோமாளி 3-ல் கலந்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, ’தெரியலையே’ என பதிலளித்திருக்கிறார் ரித்திகா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: